google
google

உலக அளவில் முதலிடத்தில் உள்ள கூகுள் நிறுவனத்தின் பாலியல் குற்றச்சாட்டை வெளிப்படுத்தும் விதமாக இதனை பதிவிட்டுள்ளோம். கூகுள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும் நிறுவனத்தின் ஊழியர்கள் பெருமளவில் போராடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிங்கப்பூர், லண்டன், டோக்கியோ ஆகிய நகரங்களில் உள்ள அலுவலகங்களில் ஊழியர்கள் வெளியேறி தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். இதற்கான சரியான பதிலை இன்னும் கூகுள் நிறுவனம் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு இவ்வளவு இலவசத்தை கொடுத்த கூகுள் பெண்களின் உரிமைக்கான விஷயத்திலும் கவனம் செலுத்தத் தவறி விட்டனர். பெண்களின் உரிமை மறுக்கப்படும் இடத்தில் இதுபோன்ற புரட்சிகள் வெடித்து கொண்டே இருக்கும். இதற்கான உண்மையான பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று உலகளவில் எதிர்பார்க்கப்படுகிறது.