பிக்பாஸ் பிரபலத்தின் படத்தை வெளியிடும் சூர்யா…. இவர் ரசிகர்களின் ஃபேவரைட் ஆச்சே.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் லாஸ்லியா. இலங்கை தமிழரான இவர் ஒரு செய்தி வாசிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இலங்கைத் தமிழ் பேச்சும், குழந்தைத்தனமான குறும்பும் தமிழ் ரசிகர்களை இவரை ரசிக்க செய்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே நல்ல புகழ் வெளிச்சத்திற்கு வந்து விடுகின்றனர். ஆனால் இவர்களில் அனைவருமே மீடியாவில் நிலைத்து நிற்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு விளம்பரங்களில் நடித்து வந்த லாஸ்லியா, ஃபிரண்ட்ஷிப் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தில் லாஸ்லியாவிற்கு ஜோடியாக பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளிவரவில்லை.

suriya
suriya

இந்நிலையில் லாஸ்லியா மற்றொரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் கலந்துக கொண்ட தர்ஷனும் இணைந்து நடிக்கிறார். மேலும் முக்கியமான கதாப்பாத்திரங்களில் யோகி பாபு மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு கூகுள் குட்டப்பா என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை சபரி-சரவணன் இயக்குகின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா இன்று (ஆகஸ்ட் 3) மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார். இந்த தகவலை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்