fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ரோபோவுடன் சேர்ந்து அலப்பறை செய்யும் கேஎஸ் ரவிக்குமார்.. கலக்கலாக வந்த கூகுள் குட்டப்பா டீசர்

google-kuttappa-cinemapettai

Videos | வீடியோக்கள்

ரோபோவுடன் சேர்ந்து அலப்பறை செய்யும் கேஎஸ் ரவிக்குமார்.. கலக்கலாக வந்த கூகுள் குட்டப்பா டீசர்

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். எதார்த்தமான திரைக்கதையில் அமைந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழக ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தது.

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய கேஎஸ் ரவிக்குமார் தற்போது தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். மடமடவென படப்பிடிப்புகள் தொடங்கி கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளதாம்.

இந்நிலையில் கூகுள் குட்டப்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மனோபாலா சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கேஎஸ் ரவிக்குமார் வயதான தோற்றத்தில் அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் பரவலான எதிர்பார்ப்பு கூகுள் குட்டப்பா படத்திற்கு கிடைத்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் இடம்பெற்ற ரோபோ பொம்மை குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படமும் டெடி படம் போல குழந்தைகளை பெரிய அளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்திருக்கும் கூகுள் குட்டப்பா படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top