கூகுள் டிரைவை உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறோம். நமது கோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைக்க இலவசமாகவும், கட்டணத்திலும் கூகுள் நிறுவனம் இந்த சேவையை வழங்கி வருகிறது.

அதில் நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய செட்டிங்கள் பின்வருமாறு

1.     Default Documents Folderஐ செட் செய்வது

உங்கள் கணினியில் ஒவ்வொரு முறையும் கோப்புகளை கூகுள் டிரைவில் சேமிக்க நீங்கள் உங்கள் நேரத்தை செலவிடத்தேவையில்லை. இந்த செட்டிங் அதற்கான வழிவகை செய்யும்.

google

விண்டோவ்ஸ் கீ + E இதனை சேர்த்து அழுத்த File Explorer திறக்கும்.  அதன் இடப்பக்க லிஸ்டில் Documents folder மீது right-click செய்யவும். அதில் Location tab ஐ தேர்வு செய்து Move என்பதை கிளிக் செய்யவும்

இப்பொழுது திறக்கப்படும் விண்டோவில் இடப்பக்க லிஸ்டிலிருந்து Google Drive தேர்ந்தெடுத்து Select Folder என்பதை கிளிக் செய்க. பிறகு எந்த path என தேர்வு செய்து ஓகே கொடுக்கவும்.

2.     Offline கோப்புகளை பயன்படுத்துதல்

உங்கள் கணினியில் கூகுள் டிரைவை லோகலாக பயன்படுத்துகிறீர்கள் எனில் நீங்கள் எந்த செட்டிங்கும் செய்யத் தேவையில்லை. ஆனால் இதை நீங்கள் offlineல் உங்கள் ப்ரௌசரில் செய்ய நினைத்தால்

google

Google Chrome பிரவ்சரை திறந்துகொள்ளுங்கள். Google Docs Offline extensionஐ இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். Google Drive சென்று Cog iconஐ கிளிக் செய்யவும். பிறகு Settings சென்று General paneல் Sync Google Docs, Sheets, Slides & Drawings files to this computer so that you can edit offline என்பதை டிக் செய்யவும்.

3. உங்கள் App Permissionsகளை சோதித்தல்

WhatsApp’s chat backups போன்று உங்கள் கூகுள் டிரைவை பல பிற ஆப்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதற்காக எந்தெந்த ஆப்கள் கூகுள் டிரைவோடு இணைந்து பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

google

இதை செய்வதற்கு Google Drive சென்று Cog iconஐ கிளிக் செய்யவும். பிறகு Settings சென்று Manage Apps window வை திறந்துகொள்க. இங்கு உங்கள் தற்போதைய அனைத்து ஆப்களும் தெரியும்.

Options dropdownகளை பயன்படுத்தி தேவையில்லாததை Disconnect from Drive அல்லது Delete hidden app data கிளிக் செய்து நிறுத்திவிடலாம்.

4. Automatically Back Up Photos and Videos

நீங்கள் மொபைலில் வைத்திருக்கும், புதிதாக சேமிக்கும் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ கோப்புகளை தானாக கூகுள் டிரைவில் சேமிக்க முடியும்.

google

உங்கள் ஆண்டிராய்டு மொபைலில் Google Drive app ஐ திறந்து கொண்டு அதன் menu icon ஐ டாப் செய்யவும்.  பிறகு Settings  சென்று Auto Add என்பதை ஆன் செய்யுங்கள்.

நீங்கள் iOS மொபைல் வைத்திருப்பின் Google Drive app ஐ திறந்து கொண்டு அதன் menu icon ஐ டாப் செய்யவும்.  பிறகு Settings  சென்று  Photos தேர்வு செய்து அதில் Auto Add என்பதை ஆன் செய்யுங்கள்.

5. Set Default Document Formatting

ஒவ்வொரு முறை நீங்கள் டிரைவில் ஒரு புதிய கோப்பை ஆரம்பிக்கும் போதும் அந்த கோப்பில் பான்ட் வகை மற்றும் அளவை தேர்வு செய்ய வேண்டியிருக்கும். இதனை தாமாக செட் செய்ய

google

முதலில் Google Docsல் ஒரு கோப்பை திறந்துகொள்ளுங்கள். அந்த கோப்பில் எதையாவது தட்டச்சு செய்து அதை தேர்ந்து வைத்துக்கொள்ளுங்கள், அந்த பான்ட்டிற்கு அளவு மற்றும் வகை தேர்வு செய்துகொள்ளுங்கள். இப்போது Format > Paragraph styles > Normal text > Update normal text to match என்பதை முறையே வரிசையாக செய்யுங்கள்..

இதேபோன்று Format > Paragraph styles > Options > Save as my default styles என்பதை செய்தால் உங்களுக்கு இனி தாமாக பான்ட் ஸ்டைல் வந்துவிடும்.