இணைய உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனம் தினம் தினம் தன்னுடைய வலைத்தளங்களையும், பயன்பாடுகளையும், செயலிகளையும், தொழில் நுட்பங்களையும், கருவிகளையும் மேம்படுத்திக் கொண்டும், அறிமுகம் செய்தும் அசத்தி வருகின்றது.

சமீபத்தில் கூகுள் வெளியிட்ட பணப்பரிவர்த்தனை செயலியான Google Tez பயனாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. எத்தனையோ பணப்பரிவர்த்தனை செயலிகள் இருந்தாலும், வங்கிகளின் சொந்த செயளியாயினும் அதனை கையாளுவதில் பல சிரமங்கள் இருந்தன. ஆனால் அதை களைந்து கூகுள் மிக மிக எளிதான பணப்பரிவர்த்தனை முறையை அறிமுகம் செய்தது. தற்போது லட்சக்கணக்கனோர் இந்த செயலியை உபயோகித்து வருகின்றனர்.

google tezஇதை தொடர்ந்து கூகுள் அறிவித்துள்ள புதிய கருவிகளை சற்று பார்ப்போம்:

Google smart speaker – Home Max
நேற்று (புதன்கிழமை) கூகுள் வெளியிட்ட இந்த ஸ்மார்ட் ஒலிபெருக்கியின் விலை டாலர் மதிப்பில் $399, இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 26,000. இதில் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் வசதியுள்ளது. இந்த கருவி மூலம் பாடலை மொபைல் போன் மூலமாகவோ அல்லது ப்ளூ டூத் மூலமாகவோ அல்லது ஆக்ஸ் இன்புட் மூலமாகவோ கேட்டு மகிழலாம். இதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் வாய்ஸ் மாட்ச் என்னும் வசதி உள்ளது, இதன் மூலம் இக்கருவியின் உரிமையாளர் குரலைத் தவிர மற்றவர்கள் இதனை இயக்க இயலா வண்ணம் இதனை கட்டுப்படுத்த முடியும்.

Google Hands Free Camera – Clips
இதே போல் நேற்று கூகுள் வெளியிட்ட மற்றொரு கருவி இந்த Clips காமிரா. இதன் விலை டாலர் மதிப்பில் $249, இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 16,000. 12 மெகா பிக்சல்ஸ் சென்சார் கொண்ட இந்த காமிரா 130 டிகிரி லென்ஸ் வசதி கொண்டது, மேலும் 8GB மெமரி வசதி கொண்டது.
இதன் முக்கிய சிறப்பம்சம் Artificial Intelligence தொழில் நுட்பத்தின் மூலம் முகம் மற்றும் மற்றைய பொருட்களை தானாகவே துல்லியமாக கணித்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் வசதி கொண்டது.

Google Mobiles – Pixel 2 மற்றும் Pixel 2 XL
கூகுள் தனது புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன் வெளியிட்ட நெக்சஸ் மொபைல்கள் சந்தையில் ஆரம்ப காலத்தில் பெருமளவில் விற்றாலும் பின்பு சரியாக விற்பனையாகவில்லை. அதற்கு மாற்றாக இந்த Pixel 2 மற்றும் Pixel 2 XL மாடல்களை அறிமுகம் செய்துள்ளது கூகுள். டாலர் மதிப்பில் இவை முறையே $649 மற்றும் $849 விலை கொண்டது. இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 42,000 மற்றும் 55,000 விலை கொண்டது. இரண்டு மாடல்களும் தண்ணீரில் நனைந்தாலும் ஒன்றும் ஆகாத water resistence தன்மை கொண்டது.
மேலும் இதன் சிறப்பம்சம் இதில் இருக்கும் கூகுள் லென்ஸ். இதன் மூலம் ஓவியம், மொபைல் நம்பர்கள், முகவரி போன்றவற்றை தனியே பகுத்தறிய முடியும். இந்த மொபைல் போன்களை வாங்குவதற்கான புக்கிங் இந்தியாவில் ஆரம்பித்துவிட்டது.

google mobile pixel 2இன்னும் என்ன யோசனை முதலில் எல்லா கூகுள் கருவிகளையும் வாங்கி பயன்படுத்துங்கள்.