Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் உதவவில்லை எனக்கூறியவருக்கு சாட்டையாக வந்த பதிலடி…

சுசீந்திரன் நண்பருக்கு அஜித் உதவவில்லை எனக்கூறிய உதவி இயக்குனரின் சர்ச்சை பதிவிற்கு பதிலடியாக அஜித் வேறு பெயரில் உதவிய புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தல அஜித் உதவி என்பதை பிறருக்கு தெரியாமல் செய்பவர். அதிலும் செய்த உதவியை வாங்கியவர் தவிர பிறர் அறியாமலும் பார்த்து கொள்வார். இது கோலிவுட்டே அறிந்த சேதி தான். நேற்று அஜித் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதற்கு ரசிகர்களும், பிரபலங்களும் தனது வாழ்த்தை தெரிவித்தனர். இயக்குனர் சுசீந்திரனும், தனது வாழ்த்துக்களை கைப்பட எழுதி டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார். அப்பதிவில், நான் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டு இருக்கும் போது என் நண்பர் ரோஜா ரமணன் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அவரது ஆபிரேஷனுக்கு 3 லட்ச ரூபாய் பணம் தேவைப்பட்டது. நானும், என் நண்பர்களும் சேர்ந்து சினிமாத் துறையில் உள்ளவர்களிடம் நிதி உதவி பெற்றோம். அப்போது தான் ஜனா படப்பிடிப்பில் அஜித்தை பார்த்தேன். அவரிடம் நண்பரின் நிலை குறித்து சொன்னேன். அவரும் முகம் தெரியாத சக தொழிலாளிக்கு உதவி செய்தார் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு, உதவி இயக்குனர் இலக்கியன் என்பவர் இந்த செய்தி முற்றிலும் பொய். இதை ரோஜா ரமணின் ஆன்மாவே மன்னிக்காது. அஜித்திடம் பேசியது நான். அஜித் சார் அந்த சமயத்தில் பெரியதாக ஒரு பண உதவி செய்யவில்லை. அஜித் சாரிடன் கால்ஷீட் வாங்கவே அஜித் சாரை பற்றி சுசீந்திரன் தொடர்ந்து தவறான தகவலை பரப்பிவருவதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில், இந்த பதிவுக்கு கணேஷ் என்பவர் பதிலடியாக அக்குழுவில் நானும் இருந்தேன். பேசியது இலக்கியன் நீங்கள் தான் என்பது உண்மையே. ஆனால், அஜித் சாரின் சார்பாக ராஜா என்பவரின் மூலமாக 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ரோஜா ரமணின் பெயருக்கு ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டு இருந்தார். காலையில், அஜித்திற்கு இப்படி ஒரு களங்கம் வந்து விட்டதே என கவலையில் இருந்த ரசிகர்களுக்கு மாலையில் இந்த தகவலால் பெரும் நிம்மதி அடைந்து இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top