நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் சிவாஜி கணேசன். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவருக்கென ரசிகர்களை உருவாக்கி தந்தது. மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரத் தமிழர்களாக இவர் நடித்தது ரசிகர் மனதில் இன்றும் நீங்காத காவியமாக இருக்கிறது.

சிவாஜி கடந்த 2001ம் ஆண்டு தனது 73 வயதில் இறந்தார். தமிழக அரசு சார்பில் அவரின் கம்பீர சிலையுடன் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருக்கிறார். இது கோலிவுட் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிவாஜியின் இளைய மகனும், நடிகருமான பிரபு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அதில், அப்பாவின் பிறந்தநாளை அரசு விழாவாக அங்கீகரித்த தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட தமிழக அரசுக்கு நன்றி. இதற்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அப்பா அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவரை லட்சக்கணக்கான மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினராக பார்க்கிறார்கள். அவர்களுக்கும் என் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்

இதுதொடர்பாக நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைத்துறையின் அடையாளங்களில் முக்கியமானவர்…தமிழ் சினிமாவின் தலைசிறந்த மூத்த கலைஞர்… கலைத்துறைக்கு பெருமை சேர்த்த கலைமாமணி நடிகர் சிவாஜி கணேசன். காலத்தால் அவரது புகழ் மறைந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு அவர் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முயற்சி எடுத்த தமிழக முதல்வர், துணை முதல்வர், செய்தித்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

அதிகம் படித்தவை:  60 ஆண்டுகள், 1500 படங்கள், பல விருதுகள்,ஆனால், இறுதியில் பைத்தியமாய்!