Tamil Cinema News | சினிமா செய்திகள்
சீமராஜா-விற்கு இப்படி ஒரு மனசு.. பாசத்தில் தமிழ் மக்கள்
சமீபத்தில் சிவகார்த்திகேயன் “ மோதி மிதித்துவிடு பாப்பா “ எனும் குறும்படத்தில் சிறு குழந்தைகளுக்கு விழிப்புணர்வுகாக நடித்துக்கொடுத்தார். அதில் அவர் குட் டச் மற்றும் பேட் டச் பற்றி குழந்தைகளுக்கு தெளிவாக கூறினார். இந்த படத்தில் அவர் காசு கூட வாங்காமல் நடித்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது. இந்தியாவின் தேசிய விலங்கான அனு என்கிற 10 வயது வெள்ளைநிற புலிக்குட்டியை சமீபத்தில் தத்தெடுத்தார். இந்த உயிரினத்தை கவனித்துக் கொள்வதற்காக வண்டலூர் ஜூவில் சிவகார்த்திகேயன் சார்பாக 2.12 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.

nel-jayaraman-sivakarthikeyan
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் நெல் ஜெயராமன் என்பவரை சிவகார்த்திகேயன் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.கடந்த ஒன்றரை வருடங்களாக அவதிப்பட்டு வரும் நெல் ஜெயராமனை அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் சந்தித்து வந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனும் நேரில் சந்தித்து வந்துள்ளார். அத்தகவலை இயக்குனர் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
