தாமிரா

பாலச்சந்தர் – பாரதிராஜா இணைந்து நடித்த ‘ரெட்டச்சுழி’ படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், கவின், கஸ்தூரி, காலி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘ஆண் தேவதை’ படத்தை இயக்கியுள்ளார்.

aan devathai

இன்றைய பரபரப்பான சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இன்று நிலவும் பொருளாதாரச் சூழலும், கடன் வாங்கும் மனப்பான்மையும் மனிதர்களை எந்த எல்லைக்கு அழைத்துச் செல்கிறது என்பதை துகிலுரித்து காட்டுமாம் இப்படம்.

மறைந்த இயக்குனர் பாலசந்தரின் மீது கொண்ட மரியாதையின் அடையாளமாக ‘சிகரம் சினிமாஸ்’ என்ற நிறுவனம் தொடங்கி இப்படத்தை ஃபக்ருதீனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார் தாமிரா. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு விஜய்மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே ட்ரைலர் வெளிவந்து நல்ல ரீச் ஆன நிலையில், தற்பொழுது குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் Good & Bad Touch பற்றிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

இது போன்ற சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நேரம் ஒதுக்கி நடிக்கும் நம் சமுத்திரக்கனி அண்ணன் கட்டாயம் ஆண் தேவதை தான்.