ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

பாண்டியன் மருமகளிடம் வன்மத்தையும் காட்டிய கோமதி, பதிலடி கொடுத்த மீனா.. தங்கமயிலை நம்பிய ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தான் செய்த தவறு வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்து விட்டது என்ற குற்ற உணர்ச்சியில் தங்கமயில் ரூம்குள் அடைந்து இருக்கிறார். இதனால் தங்கமயிலை சமாதானப்படுத்தும் விதமாக மீனா மற்றும் ராஜி பேசுகிறார்கள். அப்பொழுது ராஜி, உங்களுக்கு கதிர் தான் பணத்தை கொடுத்தார் என்பது தெரியாதா என கேள்வி கேட்கிறார்.

அதற்கு தங்கமயில், கதிர் தம்பி தான் கொடுத்தார் என்பது தெரியும். ஆனால் மாமா பணத்தை எடுத்துக் கொடுத்தார் என்பது எனக்கு நேற்று தான் தெரியும் என சொல்கிறார். உடனே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிய தங்கமயில் நான் செய்தது தவறுதான். எல்லோரும் முன்னாடியும் என்னால் மறுபடியும் வந்து நிற்க முடியாது. இப்படியே எங்கேயாவது போய் விடலாமா என தோணுகிறது என்று சொல்கிறார்.

கோமதியை பயமுறுத்தி வாய் அடைக்க வைத்த மீனா

அதற்கு ராஜி இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. இதைப் பற்றி கவலைப்படாமல் வெளியே வாங்க என்று தங்கமயில் சொன்னதை நம்பி ராஜி மற்றும் மீனா இருவரும் வெளியே சாப்பிட கூப்பிடுகிறார்கள். பிறகு சாப்பிடுவதற்கு வந்த தங்கமயிலை கோமதி வன்மத்தை காட்டும் விதமாக ஹோட்டலுக்கு செலவானது அங்கே சாப்பிடுவதற்கு எவ்வளவு ஆனது என்பதை வைத்து அரசிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்.

இதை கேட்ட தங்கமயில், எங்க அம்மா பணம் அனுப்பி வைக்கிறேன்னு தான் சொன்னாங்க. மாமா தான் வேண்டாம் என்று மறுத்து விட்டார் என சொல்கிறார். ஆனால் தன்னுடைய பொறந்த வீட்டில் ஒரு பைசா கூட வழி இல்லை என்பது தெரிந்தும் வாய் கூசாமல் பொய் சொல்கிறார். ஆனாலும் கோமதி, இருக்கும் மொத்த ஆத்திரத்தையும் கொட்டும் விதமாக தங்கமயிலை வச்சு சிறப்பான ஒரு சம்பவத்தை செய்து விட்டார்.

இதை எல்லாம் பார்த்த மீனா சும்மா இல்லாமல் கோமதியை சீண்டி பார்க்கும் விதமாக ஒரு பதிலடி கொடுத்து விட்டார். தங்கமயில் உண்மையை மறைத்ததற்கே மாமா இப்படி கோபப்படுகிறார் என்றால், ராஜி கதிருக்கு நீங்கதான் கூடவே இருந்து கல்யாணத்தை பண்ணி வைத்தீர்கள் என்ற விஷயம் தெரிந்து விட்டால் என்ன நடக்கும் என்று சொல்கிறார். அத்துடன் உங்க அண்ணன் குடும்பத்தின் மானத்தை காப்பாற்ற இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறீர்கள் என்பதும் தெரிந்து விட்டால் மாமா உங்களை உண்டு இல்லைன்னு பண்ணி விடுவார் என சொல்கிறார்.

இதை கேட்டதும் கோமதி அப்படியே ஆடிப் போய்விட்டார். ஆமாம் இதுவரை என் கணவரிடம் எந்த ஒரு உண்மையையும் மறைக்கவே இல்லை. இந்த ஒரு விஷயம் தெரிந்து விட்டால் என்ன நடக்கும் என பயப்பட ஆரம்பித்து விட்டார். இதனை தொடர்ந்து பாண்டியன் கடைக்கு போயிட்டு வந்ததும் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் ஒன்றாக உட்கார வைத்து அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

இது எப்போதும் வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம் தான் என்பதற்கு ஏற்ப பாண்டியனின் வாரிசுகள் அதைக் கேட்பதற்கு தயாராகி விட்டார்கள். அந்த வகையில் போர் அடிக்காமல் இருப்பதற்கு உணவு பண்டங்களையும் எடுத்து வைத்து தயாராகி விட்டார்கள். அப்படி பாண்டியன், பேச்சை ஆரம்பிக்கும் பொழுது ஒவ்வொரு பண்டங்களும் கைமாறுகிறது.

அப்பொழுது கதிர் மற்றும் ராஜிக்கு ஒரு உணர்வு ஏற்படுத்தும் விதமாக அந்த இடத்தில் ரொமான்ஸ் ஆரம்பம் ஆகிறது. இதனை தொடர்ந்து இனி அடுத்து வரும் எபிசோடுகளில் ராஜி மற்றும் கதிர் வைத்து முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News