Connect with us

Cinemapettai

வசூல் கிங் ஆன ஜெயம் ரவி.. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?

Cinema News | சினிமா செய்திகள்

வசூல் கிங் ஆன ஜெயம் ரவி.. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?

சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி நடிப்பில் “கோமாளி” திரைப்படம் திரைக்கு வந்து அசத்தியது இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் மட்டுமே இத்திரைப்படம் ரூ 42 கோடி வரை வசூலை அடித்துள்ளதாம்.

ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் புதுமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் வெளிவந்த படம் “கோமாளி”. இப்படத்தில் யோகிபாபு ஒரு முக்கியமான ரோலில் நடித்திருப்பார். இப்படத்தில் 90களில் பிறந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக கதைகளும் காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கும். இது வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வர காரணமாக உள்ளது.

விஸ்வாசம் படத்திற்கு பிறகு தமிழில் கிடைத்த மாபெரும் வெற்றி என கோமாளி படம் கொண்டாடப்படுகிறது. படம் தான் கோமாளி ஆனால் யாரையும் ஏமாளியாக ஆக்காமல் நல்ல லாபத்தை தந்துள்ளது. இப்படத்தினை பெற்ற தியேட்டர்காரர்களுக்கு ரூ.10 கோடிக்கும் மேல் லாபம் வந்துள்ளது தமிழ் சினிமா உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

படம் நல்லா இருந்தா மக்கள் ஆதரிப்பார்கள்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top