goli-soda-2-first

2014ல் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் கோலி சோடா.  பசங்க திரைப்படத்தில் நடித்த 4 சிறுவர்கள் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகர்களாக நடித்தனர். இந்தத் திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்கினார். இவர் பிரியமுடன், வனயுத்தம், தீபாவளி, நெஞ்சினிலே, சாக்லெட், ஆட்டோகிராப், காதல், காதலில் விழுந்தேன், வழக்கு எண் 18/9, உட்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். சேரனின் தயாரிப்பில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தை இயக்கியவர்.

S D Vijay Milton

எட்டு வருடங்கள் கழித்து கோலி சோடா படத்தை இயக்கினார். அதன் பின் விக்ரம் -சமந்தா நடிப்பில் 10 எண்றதுக்குள்ள, பரத்- ராஜகுமாரன் நடிப்பில் கடுகு என இரண்டு படங்களை இயக்கினார்.

 

golisoda

தற்பொழுது ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தை, தானே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரஃப் நோட் புரொடக்ஷன்’ மூலம் தயாரித்து இயக்குகிறார். அச்சு இசை. தீபக் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். பல புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தில் இயக்குனர்கள்  சமுத்திரக்கனி, கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Goli Soda 2 Shooting Spot

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Goli Soda FLP