விஜய் மில்டன் இயக்கிய கோலிசோடா படத்தில் நடித்த சீதாவை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. ஏடிஎம் என்ற கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்தார். அதன் பிறகு விஜய் மில்டன் இயக்கிய பத்து எண்றதுக்குள்ள படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்தார்.

இப்போது மாட்டுக்கு நான் அடிமை படத்தில் ஹீரோயின் ஆகிவிட்டார். ராசன் என்ற புதுமுகம் ஹீரோ, சவுந்தர்யா என்பவர் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். பி.கே.இளையகுமார் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:

து முழுநீள காமெடி படம். மாட்டை தெய்வமாக நினைக்கும் ஒருவருக்கு அந்த மாட்டால் ஒரு பிரச்னை வருகிறது. அதிலிருந்து தன்னையும் மீட்டு மாட்டையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

மாடு நல்லா இருந்தாத்தான் விவசாயம் நல்லா இருக்கும், விவசாயம் நல்லா இருந்தாத்தான் நாடு நல்லா இருக்கும் என்கிற கருத்தை வலியுறுத்தும் படம். பல வருடங்களுக்கு பிறகு மாடும் நடித்திருக்கிறது. என்கிறார் இயக்குனர் இளையகுமார்.