Connect with us
Cinemapettai

Cinemapettai

golisoda trailer

Reviews | விமர்சனங்கள்

ரசிகர்களின் தாகத்தை தனித்த கோலிசோட-2 திரைவிமர்சனம்.!

விஜய் மில்டன் ஒளிப்பதிவாளாராக இருந்து இயக்குனராக அவதாராம் எடுத்தவர் இவர் தனது முதல் படத்தில் வெற்றி கனியை அடைய முடியவில்லை என்றாலும், கோலிசோடா எண்ட படத்தின் மூலம் தனது வெற்றியை எளிதாக அடைந்தார், அதன் பின்பு தற்பொழுது கோலி சோடா 2 எடுக்க முடிவு செய்தார்கள், தற்பொழுது கோலிசோடா 2 படத்தை வெற்றிகரமாக ரிலீஸ் செய்துவிட்டார்கள்.

கோலிசோடா முதல் பாகத்தில் வலிமை இல்லாதவரை வலிமையானவர் தாக்குவதும், பின்பு வலிமை இல்லாதவர் எப்படி வலிமையானவரை தாக்குகிறார்கள் என்பதே கதை, அதேபோல் கோலிசோடா 2 வில் அதே கதை தான் ஆனால் முதல் பாகத்தை போல் ரசிகர்களை கவர்ந்ததா கோலிசோடா2 என பார்க்கலாமா.

படத்தை பற்றிய அலசல்:

படத்தின் முதலிலேயே சமூதிரக்கனி போலிசால் கைது செய்யபடுகிறார், கைதான சமூதிரகனியை கோதம் மேனன் தான் விசாரிக்கிறார், சமூதிரகனி குறிப்பிட்டு 3 இளைஞர்களை பற்றி பேச தொடங்குகிறார், மூன்று இளைஞர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போக கடும் முயற்சி எடுக்கிறார்கள் இவர்களுக்கு எதோ ஒரு வகையில் சமூதிரகனி உதவி செய்கிறார்.

ஒருவர் ஆட்டோவில் இருந்து கார் வாங்க முயற்சி செய்கிறார், மற்றொருவர் ரவுடிகளிடம் இருந்து விலகி நல்ல வேலைக்கு போக ஆசை படுகிறார், 3 வது இளைஞர் பேஸ்கட்பால் ப்ளேயர் ஆக முயற்சி செய்கிறார். ஆனால் இவர்களின் வாழ்க்கை வலிமை மிக்கவர்களால் திசை மாறுகிறது, இந்த வலிமை இல்லாதவர்கள் எப்படி வலிமையானவர்களை எதிர்க்கிறார்கள் என்பது தான் மீதி கதை.

கோலிசோடா படத்தில் எப்படி எப்படி எதிரியை சமாளித்தார்களோ அதேபோல் தான் கோலிசோடா 2 ம் பாகத்திலும் படத்தில் முதல் பாதியில் கதைக்குள் வர கொஞ்சம் நேரம் எடுக்கிறது, கோலிசோடா படத்தில் 4 பேர் சேர்ந்து ஒருவரை அடிப்பார்கள் ஆனால் கோலிசோடா 2 படத்தில் மூன்று இளைஞர்கள் சேர்ந்து 300 போரையும் அடிப்பார்கள் போல படத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் அடிதடிதான்.

மாறனின் காதல், நல்ல வேலை, பேஸ்கட்பால் பிளேயர் ஆசை மற்றும் காதல் ஆட்டோ சிவாவின் கார் ஆசை என இந்த மூன்று இளைஞர்களின் கனவு எப்படி ஒரே இடத்தில் வந்து சிதைகிறது என்பது அழகாக கொண்டுவரும் விதம் அனைவரையும் ரசிக்க வைக்கிறது அதை விட வில்லன்கள் இவர்களை ஒரே ஜாதி என ஒரு நேர்க்கோட்டில் இணைக்கும் இடம் படத்தின் ப்ளஸ்.

மேலும் இந்த மூன்று இளைஞர்களும் இவர்களுக்கு தொல்லை தரும் வலிமையானவர்களை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை விஜய் மில்டன் அழகாக காண்பிதுள்ளார்படத்தில் கொஞ்சம் எதார்த்தம் மிஸ் ஆகிறது, சண்டை காட்சியும் செயற்கையாக இருக்கும் விதத்தில் அமைந்து விட்டது, ஆனால் படத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வதால் ரசிகர்களை ரசிக்கும் படி அமைந்துவிட்டது, படத்தில் சமூதிரகனி கிளைமேக்ஸ் ஒப்பன் பண்ணும் போதே இதுதான் நடந்திருக்கும் என யூகிக்கும் படி இருக்கிறது,

மேலும் படத்தின் பின்னணி இசையில் அச்சு ராஜமனியன் அமர்கலபடுதியுள்ளார், ஆனால் சண்டுகாட்சியில் கொஞ்சம் எரச்சல் இருக்கிறது, படத்தின் இரண்டாம் பாது மிக விறுவிறுப்பாக செல்கிறது.

படத்தின் வசனம் அனைவரையும் ரசிக்க வைத்து சிந்திக்க வைக்கிறது அப்பொழுது தான் நமது அரசாங்கம் மீது சந்தேகம் வருகிறது படத்தில் நடிகர் மற்றும் நடிகைகள் அவர்களது நடிப்பில் நன்றாக நடித்துள்ளார்கள்.

கோலிசோடா 2 திரையரங்கில் பார்த்தால் தாகத்தை தணிக்கும் : 3 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top