Vijay-Milton-Gautham-Menon-impress-with-trailer-of-Goli-Soda-2

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டு இருக்கிறது.

Samuthirakani-

கோலி சோடா படம் 2014 ஆம் வெளியாகியது. அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இப்படத்தை இயக்கி இருந்தார். கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோர் புதுமுகமாக படத்தில் நடித்திருந்தனர். இப்படம் நல்ல விமர்சனத்தையும் பெரும் வரவேற்பையும் பெற்றது. இதை தொடர்ந்து, கோலிவுட்டின் இன்றைய ட்ரெண்ட்டான இரண்டாம் பாக லிஸ்டில் இணைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் விஜய் மில்டனே இயக்கி இருக்கிறார். ரஃப் நோட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்படும் இப்படத்தில் சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிருஷ்ணா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பு வேடத்தில் நடித்து இருக்கிறார். படத்தின் டீசர், ட்ரெய்லர், சிங்கிள்ஸ், பாடல்கள் என அனைத்துமே படத்திற்கான ஹைப்பை அதிகரித்து இருக்கிறது.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்நிலையில், படத்தினை வரும் மே 18ந் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இருந்தும் சமீபத்திய தயாரிப்பாளர் சங்க நடவடிக்கையில் அனுமதி கிடைத்த பிறகே இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.