Tamil Cinema News | சினிமா செய்திகள்
முடிவானது ரிலீஸ் தேதி ! வித்யாசமான ப்ரோமோஷன் ஸ்ட்ராட்டஜி ! வெளியானது கோலி சோடா 2 பாடல்கள் !
கோலி சோடா 2
2014ல் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் கோலி சோடா. பசங்க திரைப்படத்தில் நடித்த 4 சிறுவர்கள் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகர்களாக நடித்தனர். இந்தத் திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்கினார். பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் இயக்கிய இரண்டாவது படம் இது. சூப்பர் ஹிட் அடித்தது. வசூல் வேட்டையும் நடத்திய படம் இது.
‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தை, தானே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரஃப் நோட் புரொடக்ஷன்’ மூலம் தயாரித்து இயக்குகிறார். அச்சு இசை. தீபக் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். பல புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தில் இயக்குனர்கள் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மேலும், செம்பன் வினோத் ஜோஸ், ரோகினி, சுபிக்ஷா, கிருஷா குருப், ரக்ஷிதா பாபு, பரத் சீனி, வினோத், எசக்கி பரத் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரெய்லர் மற்றும் ‘பொண்டாட்டி’, ‘கெளம்பு’ ஆகிய 2 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் அணைத்து பாடல்களும் வெளியாகி உள்ளது.
‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் ஜூன் 14 ரிலீசாகிறது.
