கமலை கௌரவித்த ஐக்கிய அரபு நாடு.. விக்ரம் படத்தின் சாதனையால் கிடைத்த அங்கீகாரம்

இத்தனை வருடங்கள் கமலஹாசன் திரைப்படங்களில் நடித்ததற்கு, தற்போது தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இத்திரைப்படத்தில் கமலஹாசனுக்கு தயாரிப்பாளராகவும், நடிகராகாவும் அவரது மார்க்கெட் மேலும் உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து, அடுத்தடுத்த திரைப்படங்களான இந்தியன் 2,தேவர் மகன் 2, உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீர நாடான துபாய்க்கு செல்ல கமலஹாசனக்கு சிறப்பு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் முதல் முறையாக நடிகை திரிஷாவுக்கு கோல்டன் விசாவை பெற்றிருந்தார். இவரை தொடர்ந்து நடிகைகள் அமலாபால், காஜல் அகர்வால், நடிகர்கள் பார்த்திபன், நாசர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. இதனிடையே 60 ஆண்டுக்கும் மேலாக சினிமாவில் கொடிக்கட்டி பறந்த உலகநாயகன் கமல்ஹாசனுக்கு, தற்போது கோல்டன் விசாவினை வழங்கி துபாய் அரசு கௌரவித்துள்ளது.

இந்த கோல்டன் விசாவின் பலன்களின் மூலமாக அடுத்த 10 வருடங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் துபாய்க்கு செல்லலாம், அதேபோல அங்கு எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம். ஏற்கனவே விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக, துபாயில் அமைந்துள்ள மிகப்பெரிய கட்டிடமான பூர்ஜ் கலிஃபாவின் வெளிப்புறத்தில் விக்ரம் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.

இதுவே தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் பூர்ஜ் கலிஃபாவில் ஓளிபரப்பப்பட்ட முதல் ட்ரைலர் என்ற பெருமையை விக்ரம் திரைப்படம் பெற்றிருந்தது. மேலும் கமலஹாசன், இப்படத்தின் ட்ரைலர் பூர்ஜ் காலிஃபாவில் ஒளிபரப்பானதை கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

விக்ரம் திரைப்படம் தமிழ், தெலுகு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில், உலகமெங்கும் பல திரையரங்குகளில் வெளியான நிலையில், துபாயிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனிடையே தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்திருந்த கமலஹாசனுக்கு, தற்போது விக்ரம் படத்தில் நடித்து புகழ்பெற்றதன் மூலமாக கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது கோலிவுட் சினிமாவிற்குக்கே பெருமைதான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்