கூவத்தூர் சொகுசு விடுதியை காலவரையின்றி மூடப்படுவதாக விடுதி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் கடந்த 11 நாட்களாக கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.

இவர்கள் கூவத்தூர் சென்ற நாள் முதல் அந்த இடம் தான் செய்திகளில் ஹைலைட். அப்படியிருக்கு, அதிமுக எம்.எல்.ஏக்கள் அங்கு சிறைப்பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டதால் காவல்துறையினர், அங்கு சோதனை செய்தனர்.

இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் அதிமுக எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து சென்னை புறப்பட்டனர்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் தற்போது கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட் காலவரையின்றி மூடப்படுவதாக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.