Tamil Cinema News | சினிமா செய்திகள்
தங்கத்தை கொடுத்து சகுனி வேலையா பார்த்த பிக் பாஸ்.. ரணகளமான வீடு!
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். மேலும் போன சீசன்களை காட்டிலும் இந்த சீசன் சற்று அதிக விறுவிறுப்புடனே காணப்படுகிறது.
ஏனெனில் தினசரி கன்டஸ்டன்ட்களுக்கு அதிரடியாக பல டாஸ்க்குகளை கொடுத்து, இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை குறைய விடாமல் பார்த்துக் கொள்கின்றனர் நிகழ்ச்சி குழுவினர்.
அந்தவகையில் நேற்று கன்டஸ்டன்ட்களுக்கு தனியாக அமைக்கப்பட்ட தங்கச் சுரங்க அறையில் தங்கத்தை சேகரிக்கும் டாஸ்க்கை கொடுத்தார் பிக் பாஸ். மேலும் இந்த டாஸ்க்-இல் நான்கு பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து தங்கத்தைச் சேகரிக்கவும், சேகரித்த தங்கத்தை பத்திரமாக வைக்கவும் சொன்னார் பிக் பாஸ்.
அப்போது முதல் குழுவில் சென்ற பாலா துணியை எடுத்துக் கொண்டு சென்றதை பார்த்த சனம், ‘இதெல்லாம் எடுத்துட்டு உள்ள போக கூடாது’ எனக் கூறினார். ஆனால் அதையெல்லாம் கேட்காமல் பாலாஜி உள்ளே சென்று தங்கத்தை எடுத்து விட்டு வெளியே வந்த பிறகு சனத்திடம் ‘நீ ஏன் என்னை தடுத்த’ என கேட்டார்.
இதை தொடர்ந்து பாலா, ‘நீங்க செஞ்சா சரி மத்தவங்க செஞ்சா தப்பா’ என சனத்திடம் வாதாட ஆரம்பிச்சார். மேலும் பாலாவை தொடர்ந்து பேசிய சம்யுக்தா சனம் செட்டியை வெளுத்து வாங்கி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஏனெனில் இது வரை வாயை திறக்காத சம்யுக்தா இப்படிப் பேசுவார் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை.
இதைத்தொடர்ந்து மறுபுறம் மொட்டை தாத்தா ஆரின் தங்கத்தை திருடி வைத்துக் கொண்டதும், அதில் ஆஜித் பங்கு கெட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு நேற்றைய பிக்பாஸ் வீடு முழுவதும் சண்டை மயமாகவே காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதைப் பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் ‘தங்கத்தை கொடுத்து ஆப்பு வச்சுட்டியே பரட்ட’ என்று இணையத்தில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

bigg-boss-promo
