Connect with us

Cinemapettai

12 நாளில் நிகழ்ந்த தலைகீழ் மாற்றம்.. தங்கம் விலை சவரனுக்கு 29 ஆயிரத்தை நெருங்குகிறது

gold-rate-increased

India | இந்தியா

12 நாளில் நிகழ்ந்த தலைகீழ் மாற்றம்.. தங்கம் விலை சவரனுக்கு 29 ஆயிரத்தை நெருங்குகிறது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் அதன் விலை சவரனுக்கு ரூபாய் 29 ஆயிரத்தை நெருங்குகிறது.

கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஒப்பிடும்போது இப்பொழுது தங்கத்தின் விலை சவரனுக்கு 2,344 ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. இடைவெளி எதுவும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. அதிலும், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து விலை அதிகளவில் அதிகரித்துள்ளது.

கடந்த 2-ந்தேதி ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்தை கடந்த நிலையில், அதன்பின்னரும் தொடர்ந்து விலை உயர்ந்ததால், கடந்த 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்தை தொட்டது. இந்தநிலையில் நேற்றும் விலை அதிகரித்து தான் காணப்பட்டது.
ரூ.29 ஆயிரத்தை நெருங்குகிறது

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 582-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 656-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.21-ம் பவுனுக்கு ரூ.168-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 603-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 824-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இன்றோ (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளையோ(புதன்கிழமை) ஒரு பவுன் தங்கம் ரூ.29 ஆயிரத்தை நெருங்கிவிடும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை கிராமுக்கு ரூ.293-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 344-ம் உயர்ந்து இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top