fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வரலாறு காணாத விலையேற்றம்.. தங்கம் சவரனுக்கு ரூ.30,120 க்கு விற்பனை

gold

India | இந்தியா

வரலாறு காணாத விலையேற்றம்.. தங்கம் சவரனுக்கு ரூ.30,120 க்கு விற்பனை

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை நேற்றைவிட இன்று இன்னும் அதிகமாக உயர்ந்து சவரன் 30 ஆயிரத்து 120 க்கு விற்பனையாகிறது.

பொருளாதார மந்தநிலைமற்றும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை மிகக் கடுமையாக அதிகரித்து வருவது முக்கியமான விஷயமாகும்.

தற்போதைய சூழலில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் போட்ட பணம் வருமா வராதா என்ற ஒரு சூழலில் எல்லோரும் தங்கத்தின் மீது தங்களது பார்வையைத் திருப்பி உள்ளதால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதேபோல் தொழில்களில் வேறு ஏதேனும் முதலீடுகளிலும் அதிகப்படியாக பணத்தை முதலீடு செய்வது குறைந்துள்ளது. பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சியும் இதை நிரூபிக்கிறது.

தங்கத்தின் விலை கடந்த 6 மாதங்களில் ஒப்பிடுகையில் சவரனுக்கு சுமார் எட்டாயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top