fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ராட்சச ஜந்துக்களின் battle ground – Godzilla: King of the Monsters திரைவிமர்சனம்.

Godzilla-King-of-the-Monsters-Trailer-Breakdown-Header

Reviews | விமர்சனங்கள்

ராட்சச ஜந்துக்களின் battle ground – Godzilla: King of the Monsters திரைவிமர்சனம்.

மைகேல் டோஹெர்த்தி இயக்கத்தில் உலகெங்கிலும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி உள்ள படம் காட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ்.

2104 இல் வெளியான காட்ஜில்லா படத்தின் தொடர்ச்சியே இப்படம். காட்ஜில்லா, காங் – ஸ்கல் ஐலாந்து படங்களை தொடர்ந்து வெளிவரும் மூன்றாவது படம்.

கதை  – பெரிதாக நேரம் எதுவும் வீணாக்காமல் நேரடியாக கதையினுள் நுழைந்து விடுகின்றனர். மகன் இறந்த பின் தன் மகளுடன் வாழ்ந்துக்கொண்டு “மோனர்ச்” அவர்களுக்காக வேலை பார்த்து வருகிறாள் எம்மா ரஸ்ஸல். அவள் “ஓர்கா” என்ற கருவியை வைத்து இந்த மான்ஸ்டர்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று நிரூபிக்கிறாள். “மோதரா” அழகாக கட்டுப்படுகிறது. அவளையும் அவளது மகளையும் ஒரு கும்பல் கடத்துகிறது. உதவிக்கு அவளின் கணவனை தொடர்புகொள்கிறது மோனர்ச்.

மனிதர்கள் தான் உலகத்தில் அழிவை ஏற்படுத்தி விட்டனர். விரைவில் பூமி அழிந்துவிடும், எனவே பூமியை காக்க மனித இனத்தை ஒடுக்க ஒரு காலத்தில் பூலோகத்தில் கடவுள்களாக இருந்த டைட்டனில் உள்ள மான்ஸ்டர்ஸ் வெளிக்கொண்டு வந்து சமநிலையை நாட்டுவதே அந்த கும்பலின் நோக்கம். அந்த குரூப் உடன் இணைந்து எம்மா பணி புரிகிறாள் என்ற ட்விஸ்டுடன் படம் விறு விறுப்பாகிறது.

தன் ஓர்கா வைத்து “மான்ஸ்டர் ஸிரோ” (அதாவது மூன்று தலை உடைய “கிங் கிதோரா”) உயிர்த்தெழ வைக்கிறாள். “ரோடன்” ஒருபுறம் வர, “காட்ஜில்லா” மறுபுறம் என சூடு பிடிக்கிறது கதை.

ஏலியனும் கிதோராவில் கலந்துள்ளது, அதுவே சக்தி வாய்ந்தது என விளங்குகிறது மனிதர்களுக்கு. அணைத்து மிருகங்களும் அதன் கட்டளைப்படி செயல் பட, உலகில் பேரழிவு ஆரம்பம் ஆகிறது. மனிதன் தனியாக அதனை சமாளிக்க முடியாது என, காட்ஜில்லாவை தூண்டி அதனுடன் சண்டை போட திட்டம் போடுகிறார்கள். இறுதியில் காட்ஜில்லா எவ்வாறு சண்டை போட்டு வெற்றி பெற்றது என்பதுடன் முடிகிறது படம்.

அலசல் – பின்னணி இசை, கிராபிக்ஸ், சண்டைக்காட்சிகள் அணைத்தும் அருமை தான். பிரமாண்டத்தை நம் கண் முன்னே நிறுத்துகிறது.

படத்தின் ஓடும் நேரம் அதிகமாக இருப்பது, நமக்கு சில இடங்களில் போர் அடிக்க அரமபித்து விடுகிறது. பெரிதாக கதை என்று இல்லை. இடியாப்ப சிக்கல் போல இவர்கள் சொல்லும் சயன்ஸ் பிக்ஷன் சமாச்சாரங்கள் லாஜிக் மீறல் தான் பல இடங்களில். மனிதர்கள் வெடிக்க பார்க்க, மிருகங்கள் போரிட, சற்றே திரைக்கதை நம் பொறுமையையும் சோதிக்கிறது.

வெர்டிக்ட் – பெரிதாக எதிர்பார்ப்பு இல்லமால் பார்க்க செல்பவர்களுக்கு திருப்த்தி கிடைக்கும். எனினும் ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றத்தை கொடுக்கும் இப்படம்.

எனினும் விட்டதை பிடிக்க அடுத்த பார்ட் skull island இல் நடக்கும் எனவும் காட்ஜில்லா vs காங் என இவர்கள் சொல்லி, மீண்டும் நாம் ஆர்வத்தை தூண்டுகின்றனர்.

சினிமாபேட்டை ரேட்டிங் –  2.5 / 5 . 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top