காட் படத்தின் இரண்டாம் பாகத்தில் மதுபான நடிகருக்கு ஜோடியாக நடிக்க மாமியும் புகழும் கமிட் ஆகியிருக்கிறார்கள். இதில் மாமி முதல் பாகத்தில் நடித்தவர். இருவருக்குள்ளும் அதற்குள்ளாகவே புகைச்சல் கிளம்பி விட்டதாம்.

இருவரும் இணைந்து தோன்றுவது போல ஒரு காட்சி இருந்திருக்கிறது. இருவருக்குமே அதில் விருப்பம் இல்லையாம். கதையை மாற்ற முடியாது என்று இயக்குநர் சாதிக்க, ஹீரோவிடம் அப்ளிகேஷன் போட்டிருக்கின்றனர். அவர் சொன்னதால் வேறு வழியில்லாமல் இயக்குநர் காட்சியை மாற்றி விட்டாராம்.

ஹீரோயின்கள் சொன்னார்களா? இல்லை ஹீரோவே ஹீரோயின்களுக்காக இப்படி சொல்லி மாற்றினாரா? என்று புரியாமல் குழம்பியிருக்கிறார் இயக்குநர்.