புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கோபிக்கு ரெண்டு பொண்டாட்டிகள் சேர்ந்து வச்ச ஆப்பு.. பாக்கியாவுக்கு வாச்சதும் சரி இல்ல, பெத்ததும் சரியில்லை

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கு ஏற்ப இத்தனை நாள் பண்ணிய அட்டூழியங்கள் எதுவும் கண்ணுக்கு தெரியாமல் ஆட்டம் போட்ட கோப்பிக்கு தற்போது முடிவு காலம் நெருங்கி விட்டது. அதாவது பாக்கியா வேண்டாம் படிப்பறிவு இல்லாத ஒரு வேலைக்காரி போல் இருக்கிறார்.

என் அந்தஸ்துக்கும் பாக்யாவுக்கும் செட்டே ஆகாது என்று பல காரணங்களை சொல்லி பாக்யாவை விட்டுவிட்டு ராதிகாவின் பின்னாடி சந்தோசமாக வாழப்போனார். ஆனால் ராதிகாவை கல்யாணம் பண்ண பிறகு ஒரு நாள் கூட சந்தோசமாக இல்லை என்பதற்கு ஏற்ப தினம் தினம் பாக்கியாவை நினைத்து நினைத்து புலம்பி நிம்மதியை இழந்து விட்டார்.

நாம் இல்லை என்றாலும் பாக்கியவால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் என்ற ஒரு வக்கிர புத்தி. அத்துடன் தன் குடும்பம் தன்னைவிட பாக்யாவை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்ற ஒரு கெட்ட எண்ணம். இதெல்லாம் சேர்ந்து கோபியை சைக்கோவாக மாற்றி பாக்கியாவை பழிவாங்கியே தீர வேண்டும் என்பதற்கு ஏற்ப முழு நேரம் வேலையாகவே இறங்கி விட்டார்.

அதனால் தான் பாக்கியா ஹோட்டலில் இழுத்து மூட வேண்டும் என்பதற்காக கெட்டுப் போன கறியை அதில் கலப்படம் செய்து யாருக்கும் தெரியாது என்று கர்வமாக இருந்தார். ஆனால் பாக்கியா, ஆனந்தை வைத்து கோபியை கையும் களவுமாக பிடித்து விட்டார். இதோடு நிறுத்திக் கொள்ளாமல் தப்பு செய்தவர் கண்டிப்பாக தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதற்கேற்ப கோபி செய்த தண்டனைக்கு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டார்.

இதை தெரிந்த செழியன் மற்றும் இனியா எதற்காக என் அப்பாவை லாக்கப்பில் வைப்பதற்கு இவ்வளவு ஆவேசமாக துடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று பாக்யாவிடம் கேள்வி கேட்கிறார்கள். அப்பொழுது அங்கே வந்த எழில், அம்மா செய்து தான் சரியான காரியம் என்று சொல்கிறார். அவர் கடைசிவரை உள்ளேயே இருக்கட்டும் என்று கோபமாக சொல்கிறார்.

உடனே செழியன், எழிலை கோபமாக திட்டும் விதமாக நீ கொஞ்சம் பார்த்து பேசு. நீ இவ்வளவு எல்லாம் பேசுவாய் என்று தெரிஞ்ச அப்பா உன்னுடைய கேரியர்காக தயாரிப்பாளரிடம் பேசி உனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அதை எல்லாம் மறந்து விட்டு பேசாதே என்று சொல்கிறார். இதை கேட்டு பாக்யா அதிர்ச்சியாகி நிற்கிறார். ஏனென்றால் பாக்யாவிற்கும் தெரியாது எழிலுக்கு சான்ஸ் வாங்கி கொடுத்தது கோபி தான் என்று.

அடுத்ததாக எழில், சும்மா வாய்க்கு வந்தபடி உன் இஷ்டத்துக்கு பேசாத. நான் படம் பண்ண வேண்டும் என்றால் அம்மாவை பூஜையில் கலந்து கொள்ளக்கூடாது என்று தயாரிப்பாளர் மூலம் எனக்கு ஆர்டர் போட்டதே அவர்தான். இருப்பதிலேயே அவர்தான் அயோக்கியன் என்று எல்லா உண்மையும் போட்டு உடைக்கிறார். இதை அங்கு இருப்பவர்கள் அதிர்ச்சியாகி நின்று கேட்கிறார்கள்.

எவ்வளவு பட்டாலும் நான் திருந்த மாட்டேன் என்பதற்கு ஏற்ப ஈஸ்வரி, எல்லா விஷயமும் தெரிந்து கொண்ட பிறகு பையனுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக பாக்யாவிடம் கோபிக்கு எதிராக கொடுத்த கேசை வாபஸ் வாங்க சொல்கிறார். ஆனால் பாக்கியா தப்பு செய்ததற்கு தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும். அதனால் நான் வாபஸ் வாங்க மாட்டேன் என்று தைரியமாக சொல்லிவிட்டார்.

அதே மாதிரி ராதிகாவின் அம்மாவும் ராதிகாவிடம் மாப்பிள்ளையை ஜாமினில் இருந்து வெளியே கூட்டிட்டு வா என்று சொல்கிறார். ஆனால் ராதிகா, கோபி செய்தது தவறுதான். அதற்காக நான் ஜெயில் வாசலில் போய் நிற்க மாட்டேன் கோபிக்கு சப்போர்ட்டும் பண்ண மாட்டேன் என்று தெள்ளத்தெளிவாக சொல்லி விட்டார். ஆக மொத்தத்தில் இவ்வளவு நாள் ஆட்டம் போட்ட கோபிக்கு ரெண்டு பொண்டாட்டிகளும் சேர்ந்து ஆப்பு வச்சு விட்டார்கள்.

ஆனாலும் பாக்கியாவை பொறுத்தவரை கட்டி கூட்டிட்டு வந்த புருஷனும் சரியில்லை, பிள்ளைகளும் சரியில்லை என்பதற்கேற்ப செழியன் மற்றும் இனியா கோபியின் வக்கிர புத்தி தெரிந்த பிறகும் அப்பாவுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக பாக்யாவிடம் சண்டை போடுகிறார்கள்.

அதே மாதிரி ஈஸ்வரியும் பெத்த மனசு பிஞ்சு என்பதற்கேற்ப கோபி லாக்கப்பில் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பாக்யாவிடம் கேசை வாபஸ் வாங்க சொல்லி கெஞ்சுகிறார். ஆனால் யார் என்ன சொன்னாலும் ராதிகா மற்றும் பாக்கியா இருவருமே கோபிக்கு உதவாமல் இருந்தால் தான் கோபிக்கு கிடைக்கும் மிகப்பெரிய தண்டனையாக இருக்கும்.

- Advertisement -

Trending News