தமிழ் சினிமாவில் தற்போது புதுமுக நடிகர்கள் பலரும் தங்களது திறமையை பயன்படுத்தி படங்களில் நடித்து வருகின்றனர். மேலும் ரசிகர்களின் ஆதரவால் தொடர்ந்து பட வாய்ப்பும் கிடைத்து வருகிறது. இணையதளம் மூலமாக வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் கோபி மற்றும் சுதாகர்.
இவர்கள் வெளியிடும் வீடியோவை வைத்து தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவும் கிடைத்துவருகிறது. பல அரசியல் பிரமுகர்களை கிண்டல் செய்யும் விதமாகவும் மற்றும் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை மையமாக வைத்து இவர்கள் காமெடியாக சித்தரித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். தற்போது இவர்களது சேனலுக்கு 3 மில்லியன் நபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
சமீபகாலமாக கோபி மற்றும் சுதாகர் இருவரும் தொடர்ந்து பல வீடியோக்களை காமெடியாக சித்தரித்து வெளியிட்டனர். மக்களிடம் நிதியாக திரட்டி படத்தை தயாரிப்பதாகவும் கூறினர். அதற்காக மக்கள் பலரும் இவர்களுக்கு 6 கோடி அளவில் நிதியாக அளித்தனர். அதன் பிறகு கோபி மற்றும் சுதாகர் இருவரைப் பற்றியும் பலரும் ஏமாற்றியதாக தகவல்களை பரப்பி வந்தனர்.
இந்நிலையில் ஜெய்சன் சாமுவேல் என்ற யூடியூபர் கோபி மட்டும் சுதாகருக்கு நிதியாக அளித்த 800 பேர் பணத்தை திரும்ப முயற்சி செய்வதாக கூறினார். இதற்கு கோபி மற்றும் சுதாகர் பரிதாபங்கள் சேனல் மூலம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் சூப்பர் பேக்கரி என்ற செயலி புரமோஷனுக்காக தங்களிடம் வந்ததாகவும் தாங்கள் ப்ரோமோஷன் மட்டுமே செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஊரடங்கு காரணமாக படம் தொடங்குவதற்காக தாமதம் ஆவதாகவும் விரைவில் படத்தை பற்றிய ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்படும் எனவும் கூறினர். தற்போது ரசிகர்கள் பலரும் கோபி மற்றும் சுதாகருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர்.