சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

நிலைமை ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு கோபி அங்கிள் .. கழுத்தை நெரித்த ராதிகா

கோபி உங்க வாய்ஸ் க்கு என்ன ஆச்சு தெரியலையே, எல்கேஜி குழந்தை மாதிரி குரலை மாடுலேஷன் பண்ணி எல்லாம் பேசுறீங்க. தப்பு பண்ணுனா இப்படித்தான் இருக்கும் போல. பாக்கியா கூட இருந்தா சந்தோசமா இருக்காது என்று ராதிகாவை தேடித்தேடி போயி கல்யாணத்தையும் பண்ணிக்கிட்டாரு. ஆனால் இப்போது இவருடைய நிலைமையை பார்த்தால் இதற்குத்தானே ஆசைப்பட்டாய், அனுபவி ராஜா அனுபவி அந்த மாதிரி இருக்கு.

கோபி முன்னாடி தலை நிமிர்ந்து நீர்க்கனும் என்று அனைத்து பிரச்சனைகளையும் சவால்களாக எடுத்து போராடிவரும் பாக்கியா. இப்பொழுது ராதிகாவின் ஆபீஸ்லையே கேட்டரிங் ஆர்டரை எடுத்து அதற்கு பங்க்ஷன் ஏற்பாடு செய்து அதில் அனைவரும் கலந்து கொண்டார்கள். அதில் ராதிகாவும் வந்தார் ஆனால் அவருக்கு அங்க கிடைத்தது அவமானங்கள் மட்டுமே.

Also read: குணசேகரனுக்கு சரியான ஆளு ஜான்சி ராணி தான்.. அப்பத்தாவின் சொத்தை ஆட்டை போட்ட செம ஸ்கெட்ச்

அந்த கோபத்தை எல்லாம் ராதிகா யார்கிட்ட வந்து கொட்டுவா நம்ம இளிச்சவாயன் கோபி அங்கிள் தான். பங்க்ஷனில் இனியா என்னை வந்து நக்கலா பார்த்து சிரிக்கிறா, உங்க அப்பா, அம்மா கூட என்ன மதிக்காம அவமானப்படுத்துறாங்க. நான் என்ன வேணும்னா அங்க போனேன் என் தலை எழுத்து போயிட்டேன். அதுக்கு குடும்பத்தோட சேர்ந்து இவ்ளோ அசிங்கப்படுத்தணுமா.

மேலும் ராதிகா, கோபி கிட்ட அந்த பாக்கியா யாரு அவங்களுக்கு என்ன உறவு என்று கேட்க, அதற்கு நம்ம கோபி திருவிழா கூட்டத்தில் காணாமல் போன மாதிரி முழிக்கிறது அவருக்கு கைவந்த கலையாக இருக்கிறது.  எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்று திக்கி திணறி ராதிகா கிட்ட பேசிகிட்டு இருக்காரு. ஆனால் ராதிகாவோ எதற்கும் அசராமல் அவரைக் கொடையா குடைச்சு எடுக்கிறார்.

Also read: நிஜத்திலும் நான் குணசேகரன் மாதிரி ஆளை சந்தித்து இருக்கிறேன்.. எதிர்நீச்சல் மருமகளின் உருக்கமான பேச்சு

ஒருவிதத்தில் கோபியை பார்த்தால் பாவமாகவும் இருக்கு கழுதைக்கு வாக்கப்பட்டால் அடியும், உதையும் வாங்கி தானே ஆகணும். ஆனா பெரிய ஹைலைட்டே அவருடைய நடிப்பு தான் என்று சொல்லலாம். ஏனென்றால் அவருடைய ரியாக்ஷனை பார்க்க பார்க்க சிரிப்பை அடக்க முடியவில்லை . கடைசியில் உன் நிலைமை இப்படி ஆயிட்டு கோபி .

இவருடைய இடத்துக்கு எவ்வளவு பெரிய ஹீரோ வந்தாலும் இவருக்கு நிகராக யாராலையும் நடிப்புக்கு ஈடு கொடுக்க முடியாது. இவருடைய ரியாக்ஷனை பார்த்தா சின்னத்திரை நடிகர் திலகம் என்ற பெயர் இவருக்கு நல்லா சூட் ஆகும்.  அந்த அளவுக்கு ரியாக்ஷனை கொடுக்கிறார்.

Also read: மூர்த்தியை சரமாரியாக கேள்வி கேட்கும் ஜீவா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து வெளியே போகும் ஜோடி

- Advertisement -

Trending News