நிரம்பி வழியும் ஏஜிஎஸ் கஜானா.. கோட் 2வது நாள் கலெக்சன்

Vijay : விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்போது உருவாகி இருக்கிறது கோட் படம். இந்த படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் வசூல் பட்டையை கிளப்பி வருகிறது.

வெங்கட் பிரபு ஒரு வித்யாசமான முயற்சியாக தான் கோட் படத்தை எடுத்திருக்கிறார். இப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் இணையவாசிகள் வறுத்தெடுத்து வருகிறார்கள். ஆனாலும் இந்த விநாயகர் சதுர்த்தியில் குடும்பங்கள் ஒன்றாக இணைந்து தியேட்டருக்கு சென்று பார்க்கும் படியாக கோட் அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் முதல் நாள் கோட் படம் 126 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இந்த படம் 380 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் முதல் நாளே ஒரு நல்ல வசூலை தான் பெற்றிருக்கிறது.

கோட் படத்தின் இரண்டாவது நாள் கலெக்ஷன்

இரண்டாவது நாளும் எதிர்பார்த்தது போல் வசூல் கிடைத்திருக்கிறது. அதன்படி 24.75 கோடி வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது. அதோடு உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 110 கோடிக்கும் அதிகம் ஆக தான் இரண்டாவது நாள் வசூல் கிடைத்திருக்கிறது.

மேலும் இன்று மற்றும் நாளை விடுமுறை என்பதால் கண்டிப்பாக போட்ட பட்ஜெட்டை இந்த நான்கு நாட்களிலேயே ஏஜிஎஸ் நிறுவனம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாமல் ஏஜிஎஸ் கஜானா கோட் படத்தால் நிரம்பி வழிகிறது.

மேலும் கோட் படத்தில் விஜய்யின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் மிரண்ட போய் உள்ளனர். இத்தனை வருடமாக சினிமாவில் பயணிக்கும் விஜய்யிடமிருந்து இப்படி ஒரு அபார நடிப்பை பார்த்ததில்லை என பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் இன்னும் ஒரு படத்துடன் விஜய் சினிமாவுக்கு முழுக்க போடுவது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை உண்டாக்கி இருக்கிறது.

சதியால் கோட்-க்கு வரும் நெகட்டிவ் விமர்சனம்

- Advertisement -spot_img

Trending News