ஜெயிலர் வசூலை நெருங்குமா கோட்.? விடுமுறை நாட்களில் செய்த வசூல் வேட்டை

Goat Collection: ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 650 கோடி வசூலை பெற்றிருந்தது. ரஜினியின் பெயரில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜய்யின் கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி இந்த படம் தியேட்டரில் வசூலை வாரி குவித்து வருகிறது. கடந்த வாரம் தியேட்டரில் தமிழ் படங்கள் வெளியாகாததால் பெரும்பாலான திரையரங்குகளில் கோட் படம் தான் ஹவுஸ்ஃபுலாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அதன்படி சனிக்கிழமை 14 கோடி வசூல் செய்த கோட் படம் ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக ஒரு கோடி வசூல் செய்திருந்தது. இந்நிலையில் ஜெயிலர் வசூலை கோட் படம் நெருங்குமா என பலரும் எதிர்பார்த்த காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜெயிலர் கலெக்ஷனை முந்துமா கோட்

அந்த வகையில் கோட் படம் இப்போது 400 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது. ஆகையால் இன்னும் சில வாரங்களில் ஜெயிலர் வசூலை கோட் படம் முந்தவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த வாரம் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்கள் வெளியாகிறது.

கிட்டத்தட்ட ஏழு படங்கள் வெளியாக்குவதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதிலும் சசிகுமாரின் நந்தன், சதீஷின் சட்டம் என் கையில், ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து ஆகிய படங்களும் வெளியாகிறது.

இவையெல்லாம் மினிமம் பட்ஜெட் படங்கள் என்றாலும் ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். ஆகையால் இந்த வாரம் கோட் வசூல் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் மிக விரைவில் கோட் வசூலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது.

கோட் படத்தின் வசூல் வேட்டை

- Advertisement -spot_img

Trending News