யுவனின் பிறந்த நாளில் கொடுத்த ட்ரீட்.. இணையத்தை கலக்கும் மட்ட பாடல்

Vijay : செப்டம்பர் 5ஆம் தேதி கோட் படம் வெளியாக உள்ள நிலையில் இன்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நாலாவது சிங்கிலை படக்குழு வெளியிட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை பெரிய அளவில் பேசப்பட உள்ளது.

ஆரம்பத்தில் இந்த படத்தில் மூன்று பாடல்கள் வெளியான நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது வெளியாகியிருக்கும் மட்ட மட்ட ராஜா மட்ட என்ற பாடல் அதிரடியாக அமைந்திருக்கிறது. எப்போதுமே அஜித்துக்கு பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களை யுவன் சங்கர் ராஜா கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் கோட் படத்தில் விஜய்க்கும் ஒரு தரமான மாஸ் பாடலை யுவன் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அந்த வகையில் இந்த மட்ட பாடல் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த படத்தின் பாடல் வரிகளை விவேக் எழுதி இருக்கிறார்.

இணையத்தை கலக்கும் கோட் படத்தில் நான்காவது பாடல்

யுவன் சங்கர் ராஜா, செண்பகராஜ், வேல், ஷாம் மற்றும் நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் பாடியுள்ளனர். மேலும் இது ஒரு சண்டைக்காட்சியின் போது ஒளிபரப்பாகும் பாடல் ஆக இருக்கும் என தெரிகிறது. கத்தி, கன் போன்ற பொருட்களும் இடம் பெற்று இருக்கிறது.

என்னதான் திரைக்கதை எவ்வளவு பலமாக இருந்தாலும் படத்தின் பின்னணி இசை மிகவும் முக்கியம். யுவனின் பாடல் மற்றும் இசைக்காகவே ஓடிய படங்கள் உண்டு. அந்த வகையில் கோட் படத்தில் விஜய், யுவன் கூட்டணி ஒர்க் அவுட் ஆகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இணையத்தை கலக்கும் கோட்

Next Story

- Advertisement -