GOAT Collection: ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் விஜய் நடித்திருந்த கோட் நேற்று வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் மட்டுமல்லாமல் திரிஷா, சிவகார்த்திகேயன், தோனி என சில சர்ப்ரைஸ் கேமியோ ரோல்களும் இருந்தது.
அதையெல்லாம் தியேட்டரில் வெறித்தனமாக கொண்டாடி வரும் ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர். ஆனால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் வழக்கம் போல ட்ரோல் செய்தும் வருகின்றனர்.
இருந்தாலும் கூட கோட் இரண்டாவது நாளான இன்றும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அடுத்த சில நாட்களுக்கு எந்த தியேட்டரிலும் டிக்கெட் இல்லை என்ற தகவல்களும் பரவிக் கொண்டிருக்கிறது.
சர்வதேச அளவில் கிடைத்த வரவேற்பு
அது மட்டும் இன்றி இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 126.32 கோடிகளாக இருக்கிறது. சர்வதேச அளவில் விஜய்க்கு கிடைத்த வரவேற்பு இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது இந்த தகவலை அர்ச்சனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே அவர் பட ரிலீசுக்கு முன்பு முதல் நாள் வசூல் நூறு கோடியை தாண்டும் என கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே இப்போது நல்ல ஓப்பனிங் கிடைத்திருக்கிறது. அடுத்தடுத்து விடுமுறை நாட்களும் வருவதால் இந்த வசூல் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எது எப்படியோ இதனால் ப்ரொடியூசர் அக்கா இப்போது ஹாப்பியாக இருக்கிறார். என்னதான் நெகடிவ் விமர்சனங்கள் பரவினாலும் விஜய்யின் மாஸ் இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இனி என்ன தளபதி 69 படத்தின் அலப்பறையை ஆரம்பித்து விட வேண்டியது தான்.
அதிகாரப்பூர்வமாக வெளியான கோட் வசூல்
- வொர்க் அவுட் ஆனதா விஜய், வெங்கட் பிரபுவின் மேஜிக்.?
- கோலிவுட்டை சிவகார்த்திகேயன் கையில் ஒப்படைத்த விஜய்
- வெங்கட் பிரபு அண்ட் கோ கொடுத்த அலப்பறை