Goat Collection: விஜய்யின் கோட் படம் வெளியாகி கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆகிறது. கடந்த வாரம் தமிழில் எந்த படமும் வெளியாகாததால் கோட் படம் தான் தற்போதும் அதிக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் கணிசமான வசூலையும் பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கோட் படத்தில் விஜய்யின் சம்பளம் 200 கோடி என்று சொல்லப்பட்டது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் ஏஜிஎஸ் நிறுவனர் அர்ச்சனா கல்பாத்தி பேசியபோது பிகில் படம் ரிலீஸ் செய்த போது வெளிநாட்டில் விஜய்க்கு நல்ல மார்க்கெட் இருப்பது தெரிந்தது. அதனால் தான் கோட் படத்திற்கு 200 கோடி சம்பளம் கொடுக்க சம்மதித்ததாக கூறியிருந்தார்.
அது உண்மை இல்லை என்று சினிமா விமர்சகர்கள் வலைபேச்சு டீம் சொல்லி உள்ளனர். இப்போது தளபதி 69 படத்திற்கு விஜய்யின் சம்பளம் 250 கோடி என்று பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் அதில் அவரது சம்பளம் 225 கோடி தான் என்றும் ஜிஎஸ்டி எல்லாம் போக 180 கோடி தான் வரும் என்று கூறியுள்ளனர்.
கோட் படம் 14 நாட்களில் செய்த வசூல்
அதேபோல் ஏஜிஎஸ் 200 கோடி கொடுத்ததாக சொன்ன நிலையில் அதில் விஜய்யின் சம்பளம் 150 கோடி தான் என்றும் கூறியுள்ளனர். இதை பார்த்த பலரும் அப்படினா ஏஜிஎஸ் 200 கோடி சம்பளம் கொடுத்ததுனு வடை சுட்டதெல்லாம் பொய்யா என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
மேலும் கோட் படம் வெளியாகி கிட்டத்தட்ட 14 நாட்கள் நிறைவு செய்த நிலையில் 416 கோடி வசூல் செய்திருக்கிறது. இதன் பட்ஜெட் 380 கோடி என்று சொன்ன நிலையில் போட்ட பணத்தை தயாரிப்பு நிறுவனம் எடுத்து விட்டது. இனி வருவது எல்லாமே லாபம் தான்.
இந்த வாரம் தியேட்டரில் நந்தன், லபர் பந்து போன்ற எக்கச்சக்க படங்கள் வெளியாகிறது. போதாகுறைக்கு ஓடிடியிலும் தங்கலான், லால் சலாம் போன்ற படங்கள் வெளியாகிறது. ஆகையால் இனி கோட் படத்தின் வசூல் பெரியதாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.
கோட் கலெக்ஷன் ரிப்போர்ட்
- கோட் படத்துக்கு எண்டு கார்டு போட வரும் சசிகுமார்
- ஜெயிலர் வசூலை நெருங்குமா கோட்.?
- 10 நாட்களில் கோட் செய்த கலெக்ஷன்