Actor Vijay: விஜய் கேரளாவுக்கு சென்றாலும் சென்றார் அங்கு பெரும் வரலாறே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் போலவே அங்கும் தளபதிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
இவர் படம் இங்கு எப்படி கொண்டாடப்படுகிறதோ அதேபோல் கேரளாவிலும் கொண்டாடப்படும். அப்படி இருக்கும்போது தளபதி ரசிகர்களை சந்தித்தால் சொல்லவா வேண்டும்.
அவருடைய வருகையை ரசிகர்கள் இப்போது ஓணம் போல் கொண்டாடி வருகின்றனர். இதனால் கேரளாவே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. கோட் படப்பிடிப்பும் தாமதமாகி வருகிறது.
அதாவது தற்போது கிளைமாக்ஸ் எடுப்பதில் வெங்கட் பிரபு பிஸியாக இருக்கிறார். முதலில் இலங்கையில் தான் இதை படமாக்க திட்டமிட்டு இருந்தார்கள். பின்பு சென்னையில் எடுக்க இருந்தார்கள்.
வெங்கட் பிரபுவுக்கு விஜய் போட்ட கட்டளை
ஆனால் இப்போது கேரளாவில் எடுத்து வருகின்றனர். இதற்காக 10 நாட்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் விஜய் ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக 15 நாள் ஷெட்யூல் போட சொல்லிவிட்டாராம்.
தற்போது ரசிகர்கள் சந்திப்பும் ஜோராக நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் மம்முட்டி, துல்கர் சல்மான் ஆகியோரையும் விஜய் சந்திக்க உள்ளார்.
இதனால் படத்தின் கிளைமாக்ஸ் தாமதமாகி வருகிறது. அதை நினைத்து வெங்கட் பிரபு அப்செட்டில் இருக்கிறாராம். ஏனென்றால் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஆனாலும் தளபதியின் பிறந்த நாள் அன்று முக்கிய அப்டேட்டை கொடுப்பதற்கு அவர் திட்டமிட்டு இருந்தாராம். தற்போது ஷூட்டிங் தாமதமாகி வரும் காரணத்தால் அந்த பிளான் இழுபறியில் இருக்கிறது.