Goat collection: விஜய்யின் படங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோட் படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. கோட் படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் மற்றும் தயாரிப்பாளர் பேட்டிகளில் கூறி வந்தனர்.
ஆனால் விஜய் போன்ற பெரிய நடிகரின் படம் வெளியாகும் நிலையில் எந்த பிரமோஷனும் கோட் படத்திற்கு செய்யவில்லை. ஒருபுறம் இசை வெளியீட்டு விழா நடக்காதது படத்திற்கு பெரிய சருக்களை கொடுத்தது. இதில் நடித்த நட்சத்திரங்கள் மட்டும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வந்தனர்.
ஆனாலும் ரசிகர்களை கவருவதற்காக தோனி, சிவகார்த்திகேயன், திரிஷா போன்ற பிரபலங்களை கேமியோ தோற்றத்தில் கொண்டு வந்திருந்தார் வெங்கட் பிரபு. மேலும் விஜய் ரசிகர்களை இந்த படம் கவர்ந்திருந்தாலும் நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் இணையத்தில் உலாவியது.
கோட் மூன்றாவது நாள் கலெக்ஷன்
இதைதொடர்ந்து முதல் நாளே உலகம் முழுவதும் 126 கோடி கோட் படம் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டது. முதல் நாளே இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 76.93 கோடி கோட் படம் வசூலித்தது.
நேற்று விநாயகர் சதுர்த்தி மற்றும் சனிக்கிழமை என்பதால் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 27.45 கோடி மட்டுமே வசூல் செய்தது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 24.12 கோடி தான் வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக 128.50 கோடி வசூல் செய்து உள்ளது.
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 கோடி வசூலை கோட் நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மூன்றாவது நாளே வசூல் குறைந்தது படக்குழுவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. மேலும் ஆயிரம் கோடி வசூலை கோட் அடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வசூலில் சறுக்கிய கோட்
- கோடிகளை வாரி சுருட்டிய அர்ச்சனா
- கோட் படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
- கோட் படத்துக்கு ஆப்பு வைக்க வரும் அஜித்