India | இந்தியா
நிர்வாணமாக ஓடிய பச்சைக்கிளி முத்துச்சரம் பட வில்லன்! வைரலானது போட்டோ, கேஸ் போட்ட போலீஸ்
மிலிண்ட் சோமன் – மாடல், நடிகர், தயாரிப்பாளர், பிட்னெஸ் ஆர்வலர் என பல பரிணாமங்களை உடையவர். எலெக்ட்ரிகளில் டிப்ளமோ படித்திருந்த பொழுதும் மாடெலங்கில் தடம் பதித்தவர். அன்றைய காலகட்டங்களில் ‘மேட் இன் இந்தியா’ பாடல் மூலம் பெண்களையும்; தூர்தர்ஷனில் ஒளிபரப்பான “கேப்டன் வ்யோம்” வாயிலாக சிறுவர்களையும் கவர்ந்தவர்.
இங்க்லிஷ், ஸ்வீடிஷ், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழில் படங்களில் நடித்துள்ளார். நம் தமிழில் `பச்சைக்கிளி முத்துச்சரம்’, `பையா’, `வித்தகன்’, `அலெக்ஸ் பாண்டியன்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

Milind Soman Feat
கடந்த 4ம் தேதி தனது 55 வது பிறந்த நாளை கொண்டாடிய மிலிந்த் சோமன் தனது நிர்வாண போட்டோவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். பிறந்தநாளை கொண்டாட மனைவி அங்கிதா கொன்வருடன் கோவாவுக்கு சென்றுள்ளார்.அங்கு கடற்கரையில் நிர்வாணமாக ஓடியுள்ளார். இதனை இவர் மனைவி க்ளிக் செய்ய மனிதர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பொது இடத்தில் ஆபாசமாக நடத்தல், ஆபாசமான விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
