தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஞானவேல் ராஜா. இவர் வெளியிட்ட 24 படத்தின் திருட்டு விசிடியை பிரபல திரையரங்கே எடுக்க அனுமதித்ததாக கூறப்பட்டது.

இதை தொடர்ந்து நேற்று ஞானவேல் ராஜா, விஷால், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள்.இதில் பேசிய ஞானவேல் ராஜா ‘ஒரு பேருந்தில் மனிதன் படம் ஓடியதால், அவர்களை பிடித்து போலிஸில் ஒப்படைத்தார் விஷால்.

மனிதனுக்கும் விஷாலுக்கும் என்ன சம்மந்தம் இருக்கின்றது, அவர் தமிழ் சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்.மேலும், அவரும் ஒரு தயாரிப்பாளார் தான், இதெல்லாம் நமக்கு தேவையா? என்று விஷால் ஒதுங்கவில்லை, கண்டிப்பாக இதற்கு தயாரிப்பாளர் சங்கம் ஒரு நல்ல முடிவு விரைவில் எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.