Tamil Cinema News | சினிமா செய்திகள்
அச்சு அசல் அசுரன் போலவே தெலுங்கு ரீமேக்! நரப்பா டீஸர்
Published on
பூமணியின் வெக்கை நாவலின் தழுவல் தான் அசுரன். கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ், வெற்றிமாறன், வேல்ராஜ், ஜி வி பிரகாஷ் கூட்டணியில் பிரம்மாண்ட அசுரனாகவே ரிலீஸாகி வெற்றி பெற்ற படம்.
இப்படத்தில் 50 வயது சிவசாமியாக மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்திருப்பார். பிளாஷ் பேக்கில் சாராயம் காய்ச்சும் வாலிபர் ரோலிலும் வளம் வருவார். இப்படம் இங்கு இமாலய வெற்றி பெற்றது.
இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் நடிகர் வெங்கடேஷ், ப்ரியாமணி நடிக்கின்றனர். சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ஸ்ரீகாந்த் அட்டலா இப்படத்தை இயக்கியுள்ளார். மணிசர்மா இசை அமைத்துள்ளார்.
நேற்று வெங்கடேஷின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீஸர் வெளியானது.
