Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

தமிழில் திருமண பத்திரிக்கை அச்சடித்த மேக்ஸ்வெல்- அட சூப்பர் மச்சான்

ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் திருமண பத்திரிக்கை தான் இணையத்தில் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்.

டி 20 உலகில் மோஸ்ட் வான்டட் வீரர்களில் ஒருவர், அணைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிடுவார் தனது பேட்டிங் வாயிலாக. ஆப் ஸ்பின் வீசுவது கூடுதல் ப்ளஸ், சிறப்பான பீல்டர் இவர். ஐபிஎல் போட்டிகளில் இவரை டீம்கள் போட்டி போட்டு ஏலத்தில் எடுக்கும். கடந்த முறை பெங்களூரு அணி இவரை எடுத்து, இவரும் சிறப்பாக செயல்பட அந்த டீம் நிர்வாகம் இவரை தக்க வைத்துள்ளது. இந்த சீசன் கோலிக்கு பதிலாக இவரே கேப்டனாக இருக்கக்கூடும் என கூட சொல்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியை சேர்ந்த வினி ராமன் என்பவரை டேட்டிங் செய்து வந்தார், இந்த ஜோடிக்கு நிச்சயம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கொரானா தொற்று காரணமாக தள்ளி போன திருமணம் வரும் மார்ச் 27 மெல்பர்ன் நகரில் நடக்கவுள்ளது.

vini raman glenn maxwell invite

சர்ச்சில் மோதிரம் மாற்றுவது மட்டுமன்றி நம் பாரம்பரிய முறையில் கட்டாயம் திருமணம் நடக்கும் என்பது இந்த பத்திரிக்கை பார்த்தே தெரிகிறது. என்ன தான் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றாலும் நம் முறைப்படி பத்திரிக்கை அச்சடித்த வினியை பலரும் பாராட்டியும், தங்கள் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

ஆக மொத்தத்தில் ஐபிஎல் தொடர் முழுக்க மேக்ஸ்வெல் பங்கேற்க வாய்ப்பில்லை என்பதே தற்பொழுதைய நிலை. அப்படி ஆகும் பட்சத்தில் டு பிளெஸ்ஸி அல்லது தினேஷ் கார்த்திக் தான் கேப்டனாக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.

Continue Reading
To Top