Sports | விளையாட்டு
கிரிக்கெட்டிலிருந்து விலகுகிறார் ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வேல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
இலங்கை அணியுடன் டி 20 தொடர் விளையாடி வருகின்றது ஆஸ்திரேலிய அணி. இரண்டாவது போட்டியிலும் இலங்கையை வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தான் இந்த அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி உள்ளது.
31 வயதான ஆஸ்திரேலிய வீரர் கிளென் மாக்ஸ்வெல், மன ஆரோக்கிய பிரச்சனை காரணமாக கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
“மேக்ஸ்வேல் மன ஆரோக்கிய பிரச்னைகள் காரணமாக இலங்கை தொடரிலிருந்து விலகியுள்ளார். அத்துடன் அவர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து சில நாட்கள் விலகி ஓய்வு எடுக்க உள்ளார். இந்தப் பிரச்னையிலிருந்து அவர் விரைவில் மீண்டு வந்து கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பார். மேக்ஸ்வேலுக்கு ஆஸ்திரேலிய அணியின் மனநல மருத்துவர் ஆலோசனைகள் வழங்கி உதவி அளிப்பார் ” என்றும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

CA about glenn maxwell
இதுவரை ஆஸ்திரேலிய டீமுக்காக 110 ஒருநாள் போட்டிகள், 61 டி20 போட்டிகள், 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமன்றி உலகெங்கிலும் நடக்கும் டி 20 லீக்கிலும் மோஸ்ட் வான்டட் பிளேயர் இவர்.
சர்வ்தேச போட்டிகளில் உள்ள அழுத்தமே, இது போன்ற பிரச்சனைக்கு காரணம். எனினும் மாக்ஸ்வெல் தானே முன்வந்து இதனை பற்றி மனம் விட்டு பேசி, ஆலோசித்து நல்ல விஷயம் தான் என்கின்றனர் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள். இந்த நேரத்தில் அவருக்கு தேவை ஓய்வும், கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவு மட்டுமே.
