ராகுலிடம் மன்னிப்பு கேட்ட மாக்ஸ்வெல்! அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ளது நாம் அறிந்ததே. இன்று இரண்டாவது போட்டி நடைபெறுகின்றது. முதல் போட்டியில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது.

பின்ச் 114 , ஸ்மித் 105 , டேவிட் வார்னர் 69 ரன்கள் என கலக்கினர். மேலும் இறுதியில் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசியிருந்தார். சேஸிங்கில் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

மேக்ஸ்வெல் இந்த ஐபிஎல் சீசன் பெரிதா ரன்கள் குவிக்கவில்லை. பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல், ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 11 இன்னிங்ஸ்களில் பேட் செய்து வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார். இந்தியாவை வீழ்த்த மேக்ஸ்வேலின் அதிரடி ஆட்டமும் முக்கிய காரணமாக இருந்தது . அதே போல மற்றோரு வீரரான நியூஸிலாந்தின் ஜிம்மி நீசம் சிறப்பாக ஆடினார் நேற்று அவர் நாட்டுக்காக.

இந்நிலையில் மீம்ஸ் ஒன்றை ஷேர் செய்தார் நீசம். அதில் இந்த இருவரும் நன்றாக இங்கு விளையாடினர், ஆனால் ராகுல் கேப்டனாக இருந்த கிங்ஸ் பஞ்சாப் டீமுக்கு ஆடவில்லை என்பதனை சொல்வது போன்ற மீம்ஸ். மேலும் மேக்ஸ்வெல் அவர்களை டேக் செய்திருந்தார்.

meme tweet

அவரும் குசும்பாய் நான் பேட்டிங் செய்த தருணத்தில் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன். நாம் அனைவரும் பஞ்சாப் நண்பர்கள் என ஸ்மைலியுடன் பதிவிட்டார்.