ராஜ்கோட் : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 153 ரன்கள் சேர்த்துள்ளது.

10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 35வது போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ராஜ்கோட்டில் நடைப்பெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு இஷான் கிஷான் சிறப்பான தொடக்கம் கொடுத்தார். இவர் 35 பந்துகளில் 48 ரன்களை குவித்தார்.

ஆனால் மறுபுறம் மெக்கல்லம்6, ரெய்னா 1, பின்ச் 0, தினேஷ் கார்த்திக் 2 என விக்கெட் சரிந்தது. பின்வரிசையில் வந்த ஜடேஜா 28, பால்க்னர் 21, ஆண்ட்ரிவ் டை 25 எடுத்து குஜராத் அணியை 20 ஓவரில் 153 ரன்களுக்கு எட்டச்செய்தனர்.

மும்பையின் குருனல் பாண்டியா 4 ஓவரில் 14 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். மலிங்கா, பும்ரா தலா 2 விக்கெட்டும், ஹர்பஜன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

சிறப்பாக விளையாடி வரும் மும்பை அணி ஏற்கனவே 8 போட்டியில் 6ல் வெற்றி பெற்றுள்ளது. சிறப்பாக சேஸ் செய்யும் அணியில் ஒன்றான மும்பை அணிக்கு 153 எளிய இலக்காக இருக்கும் என தெரிகிறது.