புதுடெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 208 ரன்களை குவித்துள்ளது.

10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 42வது போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்கும், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் இடையே டெல்லியில் நடைப்பெறுகிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்க வீரர்களான மெக்கல்லம் 1, டுவைன் ஸ்மித் 9ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றினர்.

133 ரன்கள்:
பின்னர் ஜோடி சேர்ந்த ரெய்னா மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ரெய்னா 43 பந்தில் 4 சிக்ஸர், 5 பவுண்டரி அடித்து 77 ரன்களும், கார்த்திக் 34 பந்தில் 5 சிக்ஸர், 5 பவுண்டரி விளாசி 65 ரன்களை குவித்தார்.

அடுத்து வந்த பின்ச் 19க்கு 27 ரன்களும், ஜடேஜா 7க்கு 18 ரன்களும் குவிக்க 20 ஓவரில் குஜராத் அணி 7 விக்கெட் இழந்து 208 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லி அணியின் ரபாடா, முகமது சமி தலா 2 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.