மொஹாலி: குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், பஞ்சாப் அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் பெங்களூருவில் நடக்கும் 47வது லீக் போட்டியில், குஜராத், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இதில் ‘டாஸ்’ வென்ற அணி குஜராத் அணி கேப்டன் ரெய்னா, முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். குஜராத் அணியில் தவால் குல்கர்னி மீண்டும் அணிக்கு திரும்பினார். பஞ்சாப் அணியில் வோஹ்ராக்கு பதிலாக குர்கீரத் அணியில் சேர்க்கப்பட்டார்.

காலை வாரிய கப்டில்:
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, துவக்க வீரர் கப்டில் (2) சொதப்பலாக வெளியேறினார். பின் இணைந்த ஆம்லா, மார்ஷ் ஜோடி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குஜராத் பந்துவீச்சை குதறி எடுத்த இந்த ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்தது.

ஆம்லா அசத்தல்:
இந்நிலையில், மார்ஷ் (58) அரைசதம் அடித்து அவுட்டானார். இதன்பின் ஆம்லா, குஜராத் பவுலர்களை டிசைன் டிசைனாக டார்ச்சர் பண்ண துவங்கினார். திடீரென டிவிலியர்ஸ் மாதிரி விளையாட துவங்கிய ஆம்லா, அதிரடியாக ரன்கள் சேர்த்தார்.

மேக்ஸ்வெல் மிரட்டல்:
இவருக்கு கேப்டன் மேக்ஸ்வெல், சூப்பராக கம்பெனி கொடுக்க, பஞ்சாப் அணியின் ஜெட் வேகத்தில் எகிறியது. அப்படியும் நிறுத்தாமல் ஆம்லா அதிரடி காட்ட, இந்த ஆண்டு நட் க்கும் ஐபிஎல் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். இவர் 104 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இதையடுத்து பஞ்சாப் அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் (20), அக்‌ஷர் படேல் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.