அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல தடைகளைக் கடந்து நேற்று வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வசூலைக் குவித்து வருகிறது.

‘மெர்சல்’ படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே உற்சாகமான ரசிகர்கள் படத்தின் டீசர், போஸ்டரை பயங்கர ஹிட்டாக்கியதோடு இல்லாமல் படத்தையும் செம சூப்பர்ஹிட் ஆக்கியுள்ளார்கள்.

‘மெர்சல்’ படக்குழுவின் வெறித்தன உழைப்பால் மெர்சல் அரசன் உலகம் முழுவதும் கெத்து கடடி வருகிறார்.

mersal vijay
mersal vijay

தளபதி விஜயின் ரசிகர் பட்டாளம் தமிழகம் தாண்டி கேரளா, ஆந்திரா மற்றும் தென்னிந்தியா முழுவதும் பரவியிருப்பது நாம் அறிந்ததே. மெர்சல் படத்தின் வெற்றியின் மூலம் அவரது ரசிகர்கள் கூட்டம் உலகம் முழுவதும் பரவிவிட்டது.

அதே போல் இதுவரை தளபதி அவர்கள் நடித்த 61 படங்களின் 20க்கும் மேற்ப்பட்ட புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதே போல், படத்தில் 100க்கும் மேற்ப்பட்ட துணை நடிகர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் வாழ்வு கொடுத்துள்ளார்.

vijay

சாந்தனு, ஜி.வி.பிரகாஷ் போன்ற நடிகர்களும் அவர்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். இன்று விஜய், ஜெய், ரீமாசென் நடிப்பில் கடந்த 2002 ல் வெளியான பகவதி படம் 15ம் வருடம் கொண்டாட்டம் காண்கிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் ஜெய்யும் தன் ட்விட்டரில் என் மீது நம்பிக்கை வைத்தது, இப்படத்தில் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கொடுத்தற்கு நன்றி. விஜய் அண்ணா இல்லாமல் நான் இல்லை என பதிவிட்டுள்ளார்.

அதனைக் கொண்டாடும் வகையில், ட்விட்டரில் விஜயுடன் பகவதி படத்தில் எடுத்த புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார். மேலும், ‘
படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிவிட்டது. நான் சினிமாவிற்குள் அதே படத்தில் நான் வந்தேன்.

என்னை நம்பி விஜய் அண்ணன் கொடுத்த அந்த வாய்ப்பினை என் வாழ்நாளில் மறந்துவிட மட்டேன். நீங்கள் இல்லை எனில் தற்போது நான் இங்கு இல்லை’
என மனம் நெகிழ ட்வீட் செய்துள்ளார்.