dhoni

தற்போது இந்திய அணி இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. நாளை முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

MSD

நம்ம தல தோனி எந்தளவுக்கு பைக் பிரியரோ, அதே அளவுக்கு செல்லப் பிராணிகளை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டுபவர்.

தனது இல்லத்தில் நாய்கள், பூனைகள் என பலவற்றை தோனி வளர்த்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றுவிட்டதால், இந்தியா டெஸ்ட் தொடர்கள் விளையாடும் போதெல்லாம், தோனிக்கு விடுமுறை தான்.

ZOYA(Dutch shepherd) does some training and LILY(husky) does the cheering job

A post shared by @mahi7781 on

அப்போது, நண்பர்களுடன் பொழுதை கழிப்பதிலும், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் நேரத்தை கடத்துவதும் தோனிக்கு பிடித்த விஷயங்கள்.

தற்போது இந்திய அணி இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. நாளை முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

அதிகம் படித்தவை:  டி 20 போட்டிகளுக்கு தோனி வேண்டாம் : சொல்கிறார்கள் அகர்கர், லஷ்மண், சோப்ரா.

இந்த நிலையில், ராஞ்சியில் உள்ள தன் பண்ணை வீட்டில் இருக்கும் நாய்களுக்கு வளையங்களுக்குள் பாயும் பயிற்சியை தோனி அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

kohli

இதனை தோனியே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஒரு தேர்ந்த பயிற்சியாளரை போல, தனது செல்ல நாய்களுக்கு இந்தப் பயிற்சியினை அவர் அளிக்கிறார். வீடியோ இதோ,

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் தோனி மீதான விமர்சனங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்திய அணிக்கு 2 உலகக் கோப்பைகளைப் பெற்றுத் தந்த கேப்டன், டெஸ்டில் நம்பர் ஒன் அந்தஸ்து, சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கெதிரான ஒருநாள் தொடர் வெற்றி என சக்சஸ்ஃபுல் கேப்டனாக வலம் வந்த தோனி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்து, லிமிடெட் ஓவர் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.

அதிகம் படித்தவை:  பாகுபலி, தோனி ஏன் அஜித்திற்கே டப்பிங் பேசியது இவர் தான்- புகைப்படம் உள்ளே
ms-dhoni

ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக மட்டுமே செயல்பட்டு வந்த தோனி, அந்த பொறுப்பிலிருந்தும் விலகுவதாக கடந்த ஜனவரியில் அறிவித்தார்.

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும், அணியில் ஒரு வீரராக தோனி தொடர்ந்து இடம்பெற்று வந்தார். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக தோனி அறிவித்தது முதலே, அவரது ஓய்வுகுறித்த கேள்விகள் எழத் தொடங்கின.

ms-dhoni

சமீபத்தில் முடிந்த நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் தோனியின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகின. குறிப்பாக ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் அவர் மெதுவாக ரன் சேர்த்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இளைஞர்களுக்கு தோனி வழிவிட வேண்டும் என்று வி.வி.எஸ். லட்சுமணன், அஜித் அகார்கர் போன்ற முன்னாள் வீரர்களே தோனியை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கினார். இந்த விமர்சனங்களுக்கு விராட் கோலி, நெஹ்ரா, ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் பதிலடி கொடுத்திருந்தனர்.