சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பொறவு எங்க ஓட்டுக்கு என்ன மரியாதை.. பிக்பாஸ் வைத்த ட்விஸ்ட், அழுகாச்சி டிராமா போட்ட ஜாக்லின்

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. முதல் ப்ரோமோவில் இந்த வார டாஸ்க்கில் பெண்கள் அணி வெற்றி பெற்று ஆண்கள் மூஞ்சியில் கரியை பூசி இருக்கின்றனர்.

ஆனா அங்க தான் பிக் பாஸ் வைத்தார் ஒரு ட்விஸ்ட். அதாவது இந்த டாஸ்க் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு துருப்புச் சீட்டு. அதன்படி தற்போது பெண்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த வாரம் நான்கு பேர் நாமினேட் லிஸ்டில் இருக்கின்றனர்.

அவர்களில் ஒருவரை மற்ற பெண்கள் காப்பாற்றலாம் என்பது விதிமுறை. ஆனால் யாரை தேர்ந்தெடுப்பது என தெரியாமல் மற்ற பெண்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். இதில் சாச்சனா இரண்டாவது முறையாக எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதனால் எனக்கு ஓட்டு போடுங்கள் என கேட்கிறார்.

அதேபோல் ஜாக்லின் கண்ணீருடன் கோரிக்கையை வைக்கிறார். சௌந்தர்யா ஏதாவது பண்ணனும்னு நினைக்கிறேன் என அரசியல்வாதி போல் பேசுகிறார். இதில் தர்ஷா குப்தா எனக்கு ஓட்டு கேட்க உரிமையே இல்லை என விரக்தியில் பேசுகிறார்.

இதனால் மற்ற பெண்கள் தான் தலையில் கை வைத்த படி அமர்ந்து விட்டனர். இதன் மூலம் வீட்டுக்குள் ஒரு சண்டை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் இறுதியாக அவர்கள் ஜாக்லினை முடிவு செய்வார்கள் என தெரிகிறது.

ஏனென்றால் வந்த முதல் நாளிலிருந்து ஏதாவது ஒன்று செய்து தங்கள் அணிக்கு கன்டென்ட் கொடுத்து வருகிறார். அதனால் இவரை மற்ற பெண்கள் காப்பாற்ற வாய்ப்பு உள்ளது. ஆனாலும் ஓட்டு போட்ட எங்களுக்கு என்ன மரியாதை என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Trending News