திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

நீ ஒரு மொக்க பீஸ், ரோஷமே இல்ல.. கொளுத்தி போட்ட பிக்பாஸ், இறங்கி ஆடும் கேர்ள்ஸ்

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் ஏகப்பட்ட கலவரங்கள் ராஜதந்திரங்கள் வன்மம் என இருந்தாலும் சுவாரசியம் மட்டும் இல்லை என்பது தான் உண்மை.

பல பேர் பார்க்கும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதும் போட்டியாளர்களின் கடமையாக இருக்கிறது. ஆனால் வன்மத்தை இறக்கி வைக்கும் வேலையைத்தான் அவர்கள் தவறாமல் செய்கின்றனர்.

இதனாலேயே இந்த சீசன் வெறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் சாச்சனா ஜெஃப்ரியிடம் நடந்து கொண்ட முறை நிச்சயம் கண்டிக்கத்தக்கது. இதை வார இறுதியில் விஜய் சேதுபதி நிச்சயம் கேட்பார் என தெரிகிறது.

இது ஒரு பக்கம் இருக்க இந்த வாரம் யார் சுவாரசியம் இல்லாத போட்டியாளர்கள் என பிக் பாஸ் இருவரை தேர்ந்தெடுக்க சொன்னார். அதன்படி ஒட்டுமொத்த வீடும் சேர்ந்து சௌந்தர்யா சிவகுமார் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

அதில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இருவரையும் உட்கார வைத்து ஹவுஸ் மேட்ஸ் மனதில் உள்ள கடுப்பை எல்லாம் வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவும் பிக் பாஸ் கொளுத்தி போட்டதுதான்.

சௌந்தர்யாவை ரவுண்டு கட்டிய கேர்ள்ஸ்

அதில் சௌந்தர்யாவை மொக்க பீஸ், கியூட்டுன்னு செய்ற எல்லாம் கேவலமா இருக்கு என கேர்ள்ஸ் டீம் ரவுண்டு கட்டுகிறது. அதேபோல் சிவகுமாரை உங்கள் ஒரிஜினல் முகம் வெளிவரவில்லை என்று ஆனந்தி கூறினார்.

ஆனால் தர்ஷிகா அதையெல்லாம் தாண்டி ரோஷமே கிடையாதா எங்க வீட்ல இருக்குற உப்பையும் சேர்த்து கொடுக்கிறோம் என பேசியது கொஞ்சம் அதிகப்படி தான் என தோன்றுகிறது. ஆனாலும் ப்ரோமோவை நம்ப முடியாது நிகழ்ச்சி மொக்கையாக போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இப்படியாக இந்த வார நாட்கள் நகர்ந்த நிலையில் நாளை வீட்டை விட்டு யார் வெளியேறப் போவது என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதில் சாச்சனா கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் தான் அனைவருக்கும் உள்ளது.

- Advertisement -

Trending News