வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கெத்து காட்டிய கேர்ள்ஸ், முகம் வெளுத்து போன பாய்ஸ்.. பிக்பாஸ் நாமினேஷனில் இருந்து தப்பிக்க போவது யார்.?

Biggboss8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று யாரு கெத்து என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி அறிவு, திறமை, டீம் வொர்க் ஆகியவற்றின் அடிப்படையில் பல டாஸ்க் நடைபெற்றது.

இதில் இரண்டு அணிகளும் சில இடங்களில் சொதப்பி பல இடங்களில் ஸ்கோர் செய்தது. தற்போது இந்த போட்டியில் யார் வென்றார்கள்? என்பதை பிக்பாஸ் அறிவித்துள்ளார். அது குறித்த ப்ரோமோ இப்போது வெளியாகி உள்ளது.

அதில் கடைசி சுற்றில் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதையும் சிறப்பாக செய்து முடித்த இரு அணிகள் ரிசல்ட்டுக்காக காத்திருக்கின்றனர். அதன்படி ஆண்கள் அணி 24 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

ஆனால் பெண்கள் அணி அவர்களை தாண்டி 25 மதிப்பெண்களை பெற்று இந்த டாஸ்க்கில் வெற்றி கண்டுள்ளனர். இதை பிக் பாஸ் அறிவித்ததும் ஆண்கள் அணியின் முகம் வெளுத்து போனது.

ஆண்களை தோற்கடித்த பெண்கள் அணி

அதேசமயம் பெண்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். மேலும் இந்த வாரம் நாமினேட் ஆன நபரை காப்பாற்ற முடியும் என பிக்பாஸ் சொல்கிறார்.

அதன்படி இந்த வாரம் பெண்களை பொறுத்தவரையில் ஜாக்லின், தர்ஷா, குப்தா சௌந்தர்யா, சாச்சனா ஆகியோர் நாமினேஷனில் இருக்கின்றனர். இவர்களில் யாரை பெண்கள் அணி தேர்ந்தெடுக்கப் போகிறது என்பது தான் ட்விஸ்ட்.

இதற்காக ஒரு பெரிய வாக்குவாதமே நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதில் தர்ஷா குப்தா வழக்கம் போல கண்ணீர் விட்டு ஏதாவது ட்ராமா போடுவார். ஆனால் சாச்சனாவை தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

Trending News