பாட­சாலை சிறுவன் ஒரு­வனை பல தட­வைகள் பாலியல் ரீதி­யாக பலாத்­காரம் செய்த 28 வயது பெண்­ணுக்கு மூன்று வருட கடூ­ழிய சிறைத் தண்­டனை விதித்து அனு­ரா­த­புர மேல் நீதி­மன்றம் நேற்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது. அனு­ரா­த­புரம் சிறப்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மகேஷ் வீரமன் இந்த தீர்ப்­பிணை வழங்­கினார்.

அனு­ரா­த­புரம் பேம­ம­டுவ – அலி­வங்­குவ பகு­தியைச் சேர்ந்த பிரி­யங்­கிகா சமன் குமார எனும் 28 வய­தான, இரா­ணுவ வீரர் ஒரு­வரின் மனை­விக்கே இந்த தண்­டனை தீர்ப்பு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2011 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திக­திக்கும் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் மஹ­வி­லச்­சிய பகு­தியில் வைத்து பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் குறித்த பாட­சாலை சிறு­வனை கடு­மை­யாக பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­தமை உள்­ளிட்ட மூன்று குற்­றச்­சாட்­டுக்கள் சட்ட மா அதி­ப­ரினால் குறித்த பெண் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

குறித்த பெண்ணின் கணவன் இரா­ணுவ வீரர் என்ற ரீதியில் மாதத்தில் ஒரு நாளே வீட்­டுக்கு வரும் நிலையில் ஏனைய நாட்­களில் குறித்த பெண் குறித்த மாண­வனின் வீட்­டுக்கு சென்றே இரவில் உறக்கம் கொண்­டுள்ளார். இந் நிலையில் சில நாட்­களில் அவர் குறித்த மாண­வனை அவ­ரது வீட்­டுக்கு அழைத்து வந்தும் இரவில் தங்­கி­யுள்ளார். இதன் போதே அவர் மாண­வனை அந்த பெண் பாலியல் ரீதியில் பலாத்­காரம் செய்­துள்­ள­தாக வழக்கு விசா­ர­ணையின் போது சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

எனினும் பொலி­ஸா­ருக்கும் நீதி­மன்­றுக்கும் குறித்த பெண் வழங்­கிய சாட்­சி­யத்தில் குறித்த சிறு­வனே தனி­மையில் இருந்த தனக்கு பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பாலியல் தொல்லை கொடுத்­த­தாக தெரி­வித்­துள்ளார்.

இந் நிலையில், குறித்த பெண்­ணுக்கு எதி­ரான மூன்று குற்­றச்­சாட்­டுக்­களும் சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பிக்­கப்­ப­டு­வ­தாக அறி­வித்த நீதி­மன்றம் அப்­பெண்­ணுக்கு தண்­ட­னையை நேற்று அறி­வித்­தது.

இதன் போது மூன்று குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கும் எதி­ராக தனித்­த­னி­யாக மும்­மூன்று வரு­டங்கள் சிறைத் தண்­டனை அளிக்­கப்பட்ட போதும், குற்­ற­வா­ளி­யான பெண் கர்ப்­ப­முற்­றி­ருப்­பதை மையப்­ப­டுத்தி, தண்­ட­னையை ஒரே தட­வையில் மூன்று வரு­டங்­களில் அனு­ப­விக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. இத­னை­விட ஒவ்­வொரு குற்­றச்­சாட்டு தொடர்­பிலும் 500 ரூபா தண்டப்பணம் விதித்த நீதிவான் அதனைசெலுத்த தவறின் ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பிலும் தலா ஒரு மாத இலகு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.