Connect with us
Cinemapettai

Cinemapettai

இப்படியெல்லாம் முத்தம் கொடுத்தால் பெண்களுக்கு பிடிக்காதாம்..!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இப்படியெல்லாம் முத்தம் கொடுத்தால் பெண்களுக்கு பிடிக்காதாம்..!

காதல் வாழ்வில் முத்தம் என்பது ஒரு தனி அத்தியாயம். பெரும்பாலான ஜோடிகள், முத்தப்பரிமாற்றம் மூலமாக ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் முத்தம் கொடுக்கும் நேரங்களில் ஆண்கள் செய்யும் சில தவறுகள், அவர்களது வாழ்க்கைத் துணையை முகம் சுழிக்கச் செய்யும். அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்..!

முத்தம் கொடுக்கும் போது அதிக அளவு உங்கள் நாக்கை பயன்படுத்தாதீர்கள். உங்கள் நாக்கு ஒன்றும் உங்கள் மனைவியின் டூத் பிரஷ் கிடையாது. எனவே மிக எதார்த்தமாக, மென்மையாக அவரது இதழ்களில், இதழ் பதியுங்கள்.

முத்தம் கொடுக்கும் போது உங்கள் மனைவியின் உதடுகளை உறிஞ்சு எடுக்காதீர்கள். அவரது உதடுகள் ஒன்றும், சிக்கன் அல்ல. அவரது உதடுகளை கடித்துவிடாதீர்கள். மேலும் முத்தம் கொடுக்கிறேன் என்ற பெயரில் அவரது உதட்டை வறண்டு போக செய்து விடாதீர்கள்.

அதிக நேரம் முத்தம் கொடுத்துக் கொண்டே இருக்காதீர்கள். இதனால் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு மூச்சு முட்டலாம். சில நிமிட முத்தம்,சில நிமிட அணைப்பு, சில நிமிட சீண்டல், ஒரு சிறந்த முத்தத்திற்கான இலக்கணமாகும்.

உங்கள் முத்தம் எப்போதும் சோம்பேறித்தனமாக இருக்கக் கூடாது. நீங்கள் மென்மையாக முத்தம் கொடுத்தாலும், அது நீங்கள் முழு மனதோடு கொடுத்ததாக இருக்க வேண்டும். நீங்கள் வேண்டா வெறுப்பாக முத்தம் கொடுக்கிறீர்கள் என்பதை கண்டறிய பெண்களுக்கு சில விநாடிகள் போதும்.

முத்தம் கொடுக்கிறேன் என்ற பெயரில் உங்கள் மனைவியும் உதடுகளை நக்காதீர்கள். அது நாய் செய்யும் வேலை. முத்தம் உடலுறவுக்கான ஆரம்ப புள்ளியே தவிர, நீங்கள் இப்படி நடந்து கொண்டால் அதுவே முடிவுப் புள்ளியாகவும் அமைந்துவிடும்.

எப்போதும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிரித்துப் பேசி, அவரை கட்டியணைத்து, சில நிமிட தீண்டல்களுக்கு பிறகு முத்தம் கொடுங்கள். எடுத்தவுடனே ஏதே பசி வந்தவன் பால் பாயாசத்தை பார்த்தது போல, அவரது உதடுகள் மீது பாயாதீர்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top