குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகர தோற்றமும் குறையும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்சா நிறுவனம் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகம் இணைந்து 30 பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 7 மணி நேரம் அயர்ந்து தூங்கும்படி கேட்டுள்ளது. அதன் பின்னர் அவர்களின் முகத்தை போட்டோ எடுத்துள்ளனர்.

அதே போன்று 4 மணி நேரம் தூங்க வைத்து போட்டோ எடுக்கப்பட்டது. அதில் குறைந்த நேரம் தூங்கியவர்களின் முகம் பொலிவிழந்து கவர்ச்சி இல்லாமல் முன்பைவிட மிகவும் சோர்ந்து காணப்பட்டுள்ளனர்.

இதனால் முகம் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்றால் அதிக நேரம் அயர்ந்து தூங்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

போதிய தூக்கம் இல்லாததால், உடல் ரீதியாக பிரச்சனைகள் மற்றும் மனஅழுத்தம் ஏற்படும் என்று நாம் கேள்விபட்டிருப்போம். தற்போது கவர்ச்சியும் போய்விடும் என்பது ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.

எனவே, ஆண்கள், பெண்கள் வேலைக்கு செல்வோர் யாராக இருந்தாலும் குறைந்தது 7 மணியிலிருந்து 8 மணி நேரம் வரைக்கும் தூங்குவது உடல் நலத்திற்கு நன்மையாகும்.